ரஜினி, விஜய்யை பின்னுக்குத் தள்ளிய அஜித்.. வலிமை படத்தின் 2ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: ரஜினிகாந்தின் அண்ணாத்த, 2.0 உள்ளிட்ட படங்களின் முதல் நாள் வசூல் மற்றும் விஜய்யின் சர்கார், பிகில், மாஸ்டர் உள்ளிட்ட படங்களின் முதல் நாள் வசூலை எதிர்பார்த்தது போலவே வலிமை திரைப்படம் துவம்சம் செய்து முதல் இடத்தை பிடித்துள்ளது.
வலிமை படத்துக்கு வெள்ளிக்கிழமையான இரண்டாம் நாளும் நல்ல வசூல் வந்துள்ளது அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
50 கோடி வசூலை அசால்ட்டாக இரண்டே நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் வலிமை படம் கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நீளம் குறைப்பு
அஜித் குமாரின் வலிமை திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்த நிலையில், அதன் நீளத்தை குறைத்திருக்கிறது வலிமை படக்குழு. 2 மணி நேரம் 55 நிமிடங்கள் கிட்டத்தட்ட 3 மணி நேர படமாக வெளியான வலிமை படம் இரண்டாம் பாதியில் போர் அடிப்பதாக கிளம்பிய விமர்சனங்களால் முதல் பாதியில் 2 நிமிடங்களும் இரண்டாம் பாதியில் 10 நிமிடத்தையும் தமிழ் வெர்ஷன் வலிமையில் நீக்கியுள்ளது படக்குழு. இந்தியில் 15 நிமிட காட்சி வரை கத்தரிக்கப்பட்டு இருக்கிறதாம்.

இன்னும் வேகமாக
இந்த முயற்சியை தற்போது அனைத்து ரசிகர்களும் வரவேற்று வருகின்றனர். இதனால், படம் இன்னமும் வேகமாகவும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத வகையிலும் இருக்கும் என கூறி வருகின்றனர். இயக்குநர் எச் வினோத் இதை முன்னாடியே செய்திருந்தால், கடுமையான விமர்சனங்கள் அவர் மீது எழுதிருக்காது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முதல் நாள் வசூல்
அஜித் குமார் நடிப்பில் வெளியான வலிமை படத்தின் முதல் நாள் வசூல் உலகம் முழுவதும் 40 முதல் 50 கோடி வரை வசூல் ஈட்டியிருக்கும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் அதன் முதல் நாள் வசூல் 34 முதல் 36 கோடி என கூறுகின்றனர். தயாரிப்பாளர் போனி கபூரும் கிட்டத்தட்ட இந்த நம்பரை உறுதி செய்திருக்கிறார்.

கோலிவுட் கிங்
ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட கோலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்களின் முதல் நாள் வசூலை வலிமை திரைப்படம் முதல் நாளே அடித்து நொறுக்கி முதல் இடத்தை பிடித்துள்ளது. நடிகர் அஜித் மீண்டும் கோலிவுட் கிங் தான் என நிரூபித்துள்ளார். அடுத்த மாதம் வரப் போகும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் ஏப்ரலில் ரிலீசாக உள்ள விஜய்யின் பீஸ்ட் உள்ளிட்ட படங்கள் இந்த வசூலை முந்துகிறதா? இல்லை முறியடிக்க முடியாமல் தவிக்கப் போகிறதா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

இரண்டாம் நாள் வசூல்
வலிமை படத்தின் முதல் நாள் வசூல் விண்ணை முட்டிய நிலையில், அதன் இரண்டாம் நாள் வசூல் 23 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டு நாட்களின் வசூலையும் சேர்த்து 57 முதல் 60 கோடி வரை வசூல் குவிந்திருக்கும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Recommended Video

100 கோடி கிளப்
சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் வலிமை படத்தின் வசூல் மேலும், அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் வார முடிவில் தமிழ்நாட்டிலேயே 100 கோடி ரூபாய் வசூலை வலிமை படம் ஈட்டி விடும் என்றும் தெரிகிறது. ட்ரிம் செய்யப்பட்ட காட்சிகளும் வலிமை படத்தின் வசூலுக்கு இருந்த வேகத்தடையை நீக்கும் என டிராக்கர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications