For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வா தல.. வேறமாறி வெறித்தனம் காட்டும் வலிமை டிரைலர்.. டிரெண்டிங்கை தெறிக்கவிடும் ரசிகர்கள்!

  |

  சென்னை: தல என அழைக்க வேண்டாம் என அஜித் குமார் கோரிக்கை வைத்தாலும் தற்போது வெளியாகி இருக்கும் வலிமை டிரைலரை பார்த்த அத்தனை ரசிகர்களின் கூக்குரலும் "தல" தெறிக்கவிட்டுட்டீங்க என்றே சமூக வலைதளங்களில் ஒலித்து வருகிறது.

  தெறிக்கும் 'வலிமை' டிரைலர்..! மகிழ்ச்சிக்கடலில் AK ரசிகர்கள்..!

  போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், ஹூமா குரேஷி, கார்த்திகேயா நடிப்பில் உருவாகி உள்ள வலிமை படத்தின் அட்டகாசமான டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

  சாதானின் அடிமைகள் எனும் பைக் ரேஸ் மாஃபியா கும்பலை பிடிக்க லோக்கல் பைக் ரேசர் ஒருவர் எப்படி போலீஸ் அதிகாரியாக மாறி வில்லன் டீமை வேட்டையாடுகிறார் என்பது தான் வலிமை படத்தின் ஒன்லைனர் என இயக்குநர் எச். வினோத் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்த நிலையில், வலிமை டிரைலர் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் மெர்சல் காட்டுகிறது.

  வலிமை தியேட்டர் ரிலீசுக்கு வேட்டு வைக்குமா ஒமிக்ரான்? அப்படியே வெளியானாலும் அந்த சிக்கல் இருக்கே?வலிமை தியேட்டர் ரிலீசுக்கு வேட்டு வைக்குமா ஒமிக்ரான்? அப்படியே வெளியானாலும் அந்த சிக்கல் இருக்கே?

  வலிமை டிரைலர் ரிலீஸ்

  வலிமை டிரைலர் ரிலீஸ்

  நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில், தற்போது வலிமை படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் வெளியாகி உள்ளது. சோனி மியூசிக் சவுத் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் யூடியூப் சேனல்களில் வலிமை படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது.

  ஹேண்ட்ஸம் அஜித்

  ஹேண்ட்ஸம் அஜித்

  விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படங்களில் இருந்த லுக்கை ஒரே அடியாக மாற்றி தனது வெயிட்டை உடற்பயிற்சி மூலம் குறைத்து மீண்டும் பழைய ஹேண்ட்ஸம் அஜித்தாக மாறியுள்ளார். பைக் ஓட்டும் காட்சிகள் ஆகட்டும் எதிரிகளை பந்தாடும் காட்சிகள் ஆகட்டும், முகத்தில் தெரியும் அந்த ஆக்ரோஷம் படம் எந்தளவுக்கு ஹிட் அடிக்கப் போகிறது என்பதை இப்போதே அறிவித்து விடுகிறது.

  வேறமாறி வினோத்

  வேறமாறி வினோத்

  சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை என ஒவ்வொரு படத்திலும் தனது தனி முத்திரையை பதித்த இயக்குநர் எச். வினோத் தல ரசிகர்களுக்காகவே வலிமை படத்தை ஆக்‌ஷன் பிளாக்பஸ்டர் படமாக உருவாக்கி மிரட்டி இருக்கிறார்.

  பாலிவுட் நடிகை

  பாலிவுட் நடிகை

  நேர்கொண்ட பார்வை படத்தில் பாலிவுட் நடிகையான வித்யா பாலன் அஜித்துக்கு ஜோடியாக நடித்த நிலையில், வலிமை படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி பக்காவான ரோலில் அசத்தி உள்ளார். பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தில் ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாக நடித்த அதே ஹூமா குரேஷிக்கு வலிமை படத்தில் வலிமையான ரோல் கிடைத்திருக்கிறது.

  வில்லன் கார்த்திகேயா

  வில்லன் கார்த்திகேயா

  சிக்ஸ் பேக் உடம்புடன் ஆர்.எக்ஸ் 100 ஹீரோ கார்த்திகேயா நடிகர் அஜித்தின் வலிமை படத்தில் வில்லனாக நடித்து வருகிறேன் என முதன் முதலாக ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்ததில் இருந்து வலிமை படத்தில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது அஜித் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

  பிஜிஎம் மிரட்டல்

  வலிமை படத்தின் டிரைலர் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை ஒவ்வொரு காட்சிக்கும் பிஜிஎம் கிங் யுவன் சங்கர் ராஜா போட்டுள்ள மியூசிக் வேற லெவல் வெறித்தனம் என்று தான் சொல்லவேண்டும். விசில் தீம் மியூசிக்கிற்கு எல்லாம் படம் பார்க்கும் போது விசில் சத்தம் விண்ணை பிளக்கப் போகிறது.

  தெறிக்கும் வசனங்கள்

  தெறிக்கும் வசனங்கள்

  பணம் சம்பாதிக்கணும் ஜெயிக்கணும்.. அவ்வளவுதான்.. அதை எப்படி சம்பதிக்கிறோம், எப்படி ஜெயிக்கிறோம் என்பது முக்கியமல்ல என வில்லன் கார்த்திகேயா பேசும் வசனம் மற்றும் உயிரை எடுக்கும் உரிமை நமக்கு இல்லை சார், வலிமை என்பது அடுத்தவனை காப்பாத்தத்தான் அழிக்க இல்லை.. கேம் முடியல இப்போதான் அடுத்த லெவலுக்கு போயிருக்கு என ஒவ்வொரு வசனமும் தமிழில் படத்தின் தலைப்பை போலவே அழகாக ஆழமாக அமைந்துள்ளது பாராட்டுதலுக்குரியது. வரும் பொங்கலுக்கு உலகமெங்கும் வலிமை ரிலீஸ் என டிரைலரின் இறுதியில் போட்டுள்ளனர்.

  English summary
  Actor Ajith Kumar’s Valimai Trailer out now. Ajith Kumar fans trending the trailer in huge level. Director H Vinoth gives goosebumps to all Ajith Fans.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X
  Desktop Bottom Promotion