அஜித் திரைத்துறையில் 33 ஆண்டுகள் நிறைவு.. மனைவியாக பெருமைப்படுகிறேன்.. ஷாலினி நெகிழ்ச்சி!

சென்னை: நடிகர் அஜித் குமார் 1990 ஆம் ஆண்டு 'என் வீடு என் கணவர்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பின், 1993 ஆம் ஆண்டு வெளிவந்த 'அமராவதி' படத்தின் மூலம் கதாநாயகனாக என்ட்ரி கொடுத்தார். அந்த படத்தை தொடர்ந்து, அஜித் நடித்த ஆசை, காதல் கோட்டை, வாலி, அமர்க்களம், பில்லா, மங்காத்தா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால், அஜித் தமிழ் ரசிகர்கள் இடத்தில் நீங்கா இடம் பிடித்தார்.

அஜித் சினிமாவிற்கு வந்து 33 ஆண்டுகள் நிறைவடைந்தை தொடர்ந்து, நேற்று ரசிகர்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதனை கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான். இந்த பயணத்திற்காக முழுமனதுடன் கைகூப்பி நன்றி தெரிவிக்கிறேன். இந்த பயணம் எனக்கு எளிதாக இல்லை. இந்தத் துறைக்கு எந்தப் பின்புலமோ அல்லது யாருடைய சிபாரிசோ இல்லாமல்தான் நுழைந்தேன். முழுக்க முழுக்க என் சுய முயற்சியால் மட்டுமே சினிமா துறைக்குள் நுழைந்தேன். காயங்கள், தோல்வி என வாழ்க்கை என்னை பல வழிகளில் சோதித்தது. ஆனால் நான் தளர்ந்து போகவில்லை, முயற்சி செய்தேன், மீண்டு வந்தேன், தொடர்ந்து முன்னேறுகிறேன்.

Ajith Kumar Shalini
Photo Credit:

அறிக்கை: ஏனெனில், விடாமுயற்சி என்பதை வெறுமனே நான் கற்றுக்கொள்ளவில்லை. அதை பரிசோதித்தது அவ்வண்ணமே வாழ்த்து கொண்டு இருக்கிறேன். எண்ணில் அடங்கா அளவுக்கு வெற்றியும் தோல்வியும் சினிமாவில் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் என் வெற்றி மீது நான் சந்தேகம் கொள்ளும்போதும் உங்கள் அன்பு தான் என்னை மீண்டு வர செய்துள்ளது. இந்த அன்புக்கு என்றும் உண்மையாக இருப்பேன். இந்த அன்பை எப்போதும் இருக்கப் பிடித்திருப்பேன். ஆனால் என் பயணம் சினிமாவோடு முடிந்துவிடவில்லை என தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இருந்தார்.

பெருமை: இதைத்தொடர்ந்து, அஜித்தின் மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், நீங்கள் ஒரு தொழிலை மட்டும் உருவாக்கவில்லை, மக்களை சுமந்து சென்றீர்கள், வாழ்க்கையை மாற்றியுள்ளீர்கள், அனைத்தையும் நேர்த்தியாகச் செய்தீர்கள்.. சினிமாவில் 33 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான நேரத்தில், ஒரு மனைவியாக மிகவும் பெருமை அடைகிறேன் என பதிவிட்டுள்ளார். ஷாலினியின் இந்த பதிவிற்கு, ரசிகர்கள் லைக்குகளை குவித்து, கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர், " உண்மையான வரிகள், அவர் வாழ்க்கையை மாற்றினார்" என்று கருத்து தெரிவித்தார். மற்றொரு ரசிகர், ஷாலினி மேடம், அஜித் பயணத்தில் பலமாக இருந்ததற்கு உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X