கார்கில் போர் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய அஜித்..டிரெண்டாகும் புகைப்படம்!
சென்னை : நடிகர் அஜித் கார்கில் போர் நினைவிடத்திற்கு சல்யூட் அடிதது மரியாதையை செலுத்தியுள்ளார்.
கோலிவுட்டில் மிக பிரபலமான நடிகர்களில் அஜித்தும் ஒருவர். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்து படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வலிமை, இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வெளியான திரைப்படமாகும். எச் வினோத் இயக்கிய இந்தபடத்தை போனிகபூர் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

அஜித் 61
நேர்கொண்டபார்வை, வலிமை படத்தைத் தொடர்ந்த எச் வினோத்,போனிகபூர் கூட்டணி மூன்றாவது முறையாக ஏகே61 திரைப்படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து த்ரில்லர் படமாக உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

விறுவிறுப்பான படப்பிடிப்பு
இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. மேலும் படத்திற்கு தேவையான 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும், இன்னும் 20 சதவீத படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருப்பதாக கூறப்படுகிறது. அதை அடுத்த கட்ட படப்பிடிப்பில் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அடுத்தடுத்து பிஸி
இப்படத்தின் தலைப்பு வல்லமை அல்லது ராபரியாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதுவரை படத்தின் தலைப்பு என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்தபடத்தை முடித்தகையோடு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள 62வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து மீண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

நன்றி கூறிய மஞ்சு வாரியர்
நடிகர் அஜித் தனது நண்பர்களுடன் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் யூனியன் பிரதேசத்தில் பைக் ரைட் சென்றுள்ளார். இந்த பயணத்தில் ஏகே61 படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கும் நடிகை மஞ்சு வாரியரும் இணைந்திருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், இந்த அட்வென்சர் பயணத்தில் தன்னை இணைத்துக்கொண்டதற்கு நன்றி என ட்விட்டரில் கூறியிருந்தார்.

கார்கில் நினைவிடத்தில்
இந்நிலையில் நடிகர் அஜித் கார்கில் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து கார்கில் நினைவிடத்தில் ராணுவ வீரர்கள் சிலர் நடிகர் அஜித்துடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











