அந்த பூனைக்கு யாரு மணி கட்டுறதுன்னு தெரியல.. மெண்டல் ஹெல்த் ரொம்ப முக்கியம்.. அஜித் ஓபன் டாக்!

சென்னை: துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தய போட்டியில் நடிகர் அஜித் குமாரின் அணி 3வது இடத்தை பிடித்து இந்தியாவுக்கு பெருமைத் தேடித்தந்த நிலையில், அஜித் குமாருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். அதே சமூக வலைதளம் எந்தளவுக்கு டாக்ஸிக் ஆன ஒன்றாக மாறியிருக்கிறது என்பது குறித்து அஜித் பேசிய காட்சிகள் பலருக்கும் பாடமாக அமைய வேண்டிய ஒன்று.

அஜித் வாழ்க, விஜய் வாழ்கன்னு சொல்லிட்டு இருந்தா நீங்க எப்போ வாழப்போறீங்க என ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட அந்தவொரு கேள்வியை ஒவ்வொரு நடிகரும் தங்கள் ரசிகர்களை பார்த்துக் கேட்க வேண்டும் என்றும் சினிமாவை மட்டுமே பெரிய விஷயமாக இளைஞர்கள் தூக்கிப் பிடித்துக் கொண்டாடுவது சரியான போக்கு அல்ல என்றும் அஜித் குமார் வெளிப்படையாகவே பேசியுள்ளார்.

ajith kumar ajith kumar racing social media

சமூக வலைதளம் பொதுமக்களின் கைகளுக்கு கிடைத்துள்ள நிலையில், அதை வைத்து எப்படி முன்னேறலாம் என சிலர் யோசித்து பணம் சம்பாதித்து வர பல இளைஞர்கள் அவர்கள் பணம் சம்பாதிக்க தங்கள் நேரத்தை முதலீடாக அவர்களுக்குத் தெரியாமலே செலவிட்டு வருவது தான் கொடுமையின் உச்சம் என்கின்றனர்.

ரொம்ப டாக்ஸிக்: சோஷியல் மீடியாவில் நடிகர் அஜித் இல்லை என்றாலும், அதில் நடக்கும் விஷயங்களை தனது மனைவி ஷாலினி மற்றும் மேனேஜர் சுரேஷ் சந்திரா உள்ளிட்டோர் மூலமாக அவ்வப்போது தெரிந்துக் கொள்கிறார். ஆனால், சோஷியல் மீடியா இளைஞர்களுக்கு ஆக்க சக்தியாக இல்லாமல் அவர்களை ரொம்பவே அழிக்கும் சக்தியாக மாற்றும் டாக்ஸிக்காக உள்ளது என ஒரே போடாக போட்டுள்ளார்.

நீ எப்போது வாழப்போகிறாய்: அஜித் வாழ்க.. விஜய் வாழ்க என சொல்லிக்கிட்டு இருந்தா நீ எப்போ வாழப்போற என்கிற அழுத்தமான கேள்வியையும் நடிகர் அஜித் கேட்டுள்ளார். சோஷியல் மீடியாவில் உள்ள டாக்ஸிக் காரணமாக மெண்டல் ஹெல்த் இளைஞர்களுக்கு ரொம்பவே பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் அதில் இருந்து அவர்களை யார் காப்பாற்ற போகிறார் என்பது சுத்தமாக தனக்கு தெரியவில்லை என்று வேதனைப்பட்டுள்ளார். சிக்ஸ் பேக் வைப்பது, வசதியாக வாழ்வது, ஆரோக்கியமான உணவை உண்பது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. மனநிம்மதியுடன் வாழ்வது தான் மிகவும் முக்கியம் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ajith kumar ajith kumar racing social media

பூனைக்கு யார் மணி கட்டுவது: சோஷியல் மீடியாவால் ஏற்படும் டாக்ஸிக் நோயை குணப்படுத்த அந்த பூனைக்கு யார் மணி கட்டப் போகிறார் என்று தெரியவில்லை. ஆனால், யாராவது அதை செய்தால் மட்டுமே இளைஞர்களின் எதிர்காலம் அவர்களது வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைக்கும். அவர்களை முன்னுக்கு கொண்டு செல்லத் தூண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார் அஜித் குமார். ஆனால், அவர் 3வதாக எப்படி வந்தார். அவரது பிஆர் வேலைகளை பாருங்க என அவர் வெற்றிப் பெற்ற விஷயத்தை சுற்றியே ஏகப்பட்ட நெகட்டிவிட்டிகள் சோஷியல் மீடியாவில் வலம் வருவது தான் வேதனை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X