பட்ஜெட்டை குறைத்தால் பலே லாபம்.. சூப்பர் ரூட்டில் சூர்யா.. அஜித்தும் கடைபிடித்தால் அதிர்ஷ்டம் தான்!
சென்னை: 350 கோடி எனும் பெரிய பட்ஜெட்டில் 'கங்குவா' படத்தை பெரிதும் நம்பி சூர்யா கால் வைக்கும் போதே பலரும் எச்சரிக்கை மணியை அடித்தாலும், இயக்குநர் சிறுத்தை சிவா மீதுள்ள அதிக நம்பிக்கை காரணமாக சூர்யா அந்த படத்தில் தனது ஒட்டுமொத்த உழைப்பையும் கொட்டி நடித்தார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு படம் வெற்றி பெறாமல் படுதோல்வியை சந்தித்த நிலையில், தயாரிப்பு தரப்புக்கு ஏற்பட்ட நஷ்டத்தை புரிந்துக் கொண்ட சூர்யா சட்டென்று மாறுது வானிலை போல தனது ரூட்டையே மாற்றிக் கொண்டதன் விளைவு தான் ரெட்ரோ படம் மூலம் அவர் பெரிய லாபத்தை பார்த்தார் என சினிமா துறையே பேசி வருகிறது.
இது குறித்து பத்திரிகையாளர் அந்தணன் கூறுகையில், டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் ரெட்ரோ படங்களை கம்பேர் பண்ணவே கூடாது என்றும் சூர்யா மிகப்பெரிய நடிகர் அவருடைய படத்தின் உலகளாவிய வசூல் மற்றும் ஓடிடியில் பெரிய தொகைக்கு அந்த படம் விற்பனை செய்யப்பட்டது என படத்தின் பிசினஸே வேற எனக் கூறியுள்ளார்.
நடிகர் சூர்யா அடுத்ததாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தின் பூஜை சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெறாமல் மிகவும் எளிமையாக நடைபெற காரணமே படத்தின் பட்ஜெட்டை அதிகளவில் குறைத்துக் கொண்டது தான் காரணம் என்கின்றனர்.

பட்ஜெட்டை எகிற வைத்த ரஜினிகாந்த், விஜய்: தமிழ் சினிமாவில் பல தயாரிப்பாளர்கள் காணாமல் போக காரணமே ரஜினிகாந்த் மற்றும் விஜய் உள்ளிட்ட டாப் ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தை 100 முதல் 200 கோடி வரை என அதிகரித்தது தான் காரணம் என்கின்றனர். நடிகர்களின் சம்பளமே அத்தனை கோடி என்றால் படத்துக்கான பட்ஜெட் அதை விட அதிகம் இருந்தால் தான் படம் தரமாக வரும். ஆனால், குறைவான பட்ஜெட்டில் படத்தை இயக்க இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்கள் அழுத்தம் தர வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட இயக்குநர்கள் முழுப்படத்தையும் தாங்கள் நினைத்தபடி எடுக்க முடியாமல் முடிந்தவரை கிண்டிக் கொடுக்கின்றனர். அதனால் தான் முதல் பாதி சூப்பர், இரண்டாம் பாதி சூர மொக்கை என விமர்சனங்கள் கிளம்ப படம் படுத்துவிடுகிறது.
அஜித்தும் அதிகம் கேட்கிறார்: நடிகர்கள் தங்கள் மார்க்கெட்டை விட அதிகமான சம்பளத்தை கேட்கும் போது இந்த சிக்கல் மேலும், பெரிதாக வெடிக்கிறது. ஹீரோக்கள் நல்ல திரைக்கதைகளையும் படங்களையும் ரசிகர்களுக்கு கொடுப்பதற்கு பதிலாக நடித்தால் போலீஸ், இல்லையென்றால் கேங்ஸ்டர் என ரக ரகமான துப்பாக்கிகளையும், லாரி லாரியாக போலி ரத்தச் சாயங்களையும் பயன்படுத்தி தரமற்ற குப்பைகளை மசாலா படங்களாக உருவாக்கி வருகின்றனர். நடிகர் அஜித் குமாரும் குட் பேட் அக்லி படத்துக்கு சம்பளமாகவே 165 கோடி வரை கேட்டதாக தகவல்கள் உள்ளன. ஆனால், அந்த படம் போட்ட பட்ஜெட் அளவுக்கு கூட பாக்ஸ் ஆபீஸில் வசூல் வரவில்லை என பஞ்சாயத்து கிளம்ப காரணமே இந்த பிரச்னை தான் என்கின்றனர்.

சூப்பர் ரூட்டை பிடித்த சூர்யா: சியான் விக்ரம், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் தங்கள் சம்பளத்தை 40 கோடி அளவிலேயே கடைபிடித்து வருகின்றனர். நடிகர் சூர்யா சொந்த பேனரில் படம் நடிப்பது, மற்றும் சொந்தக்காரர்கள் பேனரில் படங்களை நடிப்பது என பிசினஸ் பார்த்து வருகிறார். ரெட்ரோ படத்தை 60 கோடி பட்ஜெட்டில் எடுத்து ஒட்டுமொத்தமாக 235 கோடி வரை லாபம் பார்த்துள்ளதாக அறிவித்துள்ளனர். அடுத்ததாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பட்ஜெட்டும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பட்ஜெட்டும் குறைவு தானாம். ஹீரோ சம்பளத்தையும் சேர்த்து முன்னணி நடிகர்கள் படங்கள் 100 கோடி பட்ஜெட்டுக்குள் தமிழ் சினிமாவில் உருவானால், அந்த படங்கள் 200 கோடி வரை வசூல் செய்தால் அனைவருக்கும் லாபத்தை கொடுக்கும் என்கிறார் அந்தணன்.

அஜித்தும் ஃபாலோ பண்ணுவாரா?: விஜய்க்கு போட்டியாக தனது சம்பளத்தை அஜித் அதிகரித்து வந்த நிலையில், இனிமேல் அந்த போட்டிக்கு இடம் இருக்காது என தெளிவாகியுள்ளது. ரஜினிகாந்தும் விஜய்யும் நடிகர்களின் சம்பளத்தை சகட்டு மேனிக்கு ஏற்றிவிட்ட நிலையில், அஜித் குமாரும் 100 கோடிக்கும் அதிகமான சம்பளத்தை கேட்டு வருகிறார். ஆனால், இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்க முடியாமல் தவித்து வரும் நிலையில், அஜித்தும் சூர்யா ரூட்டை ஃபாலோ செய்தால் அவரது தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.


Click it and Unblock the Notifications











