Good Bad Ugly: என்ன கன்றாவி இது.. நடுவிரலை காட்டும் அஜித்.. ’குட் பேட் அக்லி’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

சென்னை: மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித்தை வைத்து 'குட் பேட் அக்லி' படத்தை இயக்கவுள்ள நிலையில், தற்போது அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

நடிகர் விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்களில் சரக்கு அதிகம் இருப்பதாக கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், நடிகர் அஜித் திடீரென இப்படியொரு ஆபாச போஸ் கொடுத்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

Ajith Kumar shows middle finger in Good Bad Ugly first look shocks fans

எதிர்பாராததை எதிர்பாருங்கள் என சுரேஷ் சந்திரா ட்வீட் போட்டு இப்படி ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இன்னும் திருந்தல மாமா இன்னும் திரிஷா இல்லனா நயன்தாரா, பஹீரா மோடில் தான் உள்ளார் என கடுமையான விமர்சனங்கள் கிளம்பி வருகின்றன.

குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் லுக்: ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தாறுமாறாக இருக்க வேண்டும். ஆனால், சர்ச்சையை கிளப்பும் விதமாக அஜித்தின் இந்த போஸ்டர் அது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிங்குச்சா சிங்குச்சா பச்சை கலரு சிங்குச்சா என்கிற ரீதியில் நடிகர் அஜித் குமாரை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் காமெடி செய்யப் போகிறாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

Ajith Kumar shows middle finger in Good Bad Ugly first look shocks fans

உடல் முழுக்க டாட்டூ: நடிகர் அஜித் மொத்தம் மூன்று விதமான அட்டகாசத்தை இந்த படத்தில் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே லுக்கில் மூன்று தோற்றங்களுடன் அஜித் தென்படும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவரது உடல் முழுக்க டாட்டூக்கள் குத்தப்பட்டு உள்ளன. மேலும், துப்பாக்கிகள் இருக்க ஒரு அஜித்தின் கையில் நக்கல் டஸ்டரும் உள்ளது.

நடுவிரல் காட்டும் அஜித்: நடிகர் அஜித் நடு விரல் காட்டுவது போல போஸ்டரில் உள்ள நிலையில், அதையும் பயந்து போல ஃபிளர் செய்து ஃபர்ஸ்ட் லுக்கை உருவாக்கியிருப்பது ஏன் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. மங்காத்தா படத்தில் நடிகர் அஜித் பச்சை பச்சையாக கெட்ட வார்த்தை பேசுவது, சரக்கடிப்பது போன்ற காட்சிகளில் நடித்திருப்பார். அந்த படத்தின் காட்சிகளுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதன் பின்னர், 'நோ மீன்ஸ் நோ' என நேர்கொண்ட பார்வை படத்தின் பெண்களின் பாதுகாவலராக அஜித் நடித்திருந்தார். இந்நிலையில், மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் படுமோசமான கதாபாத்திரத்தில் அக்லியாக அஜித் நடிக்கப் போகிறாரா என்கிற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

வித்தியாசமான லுக்கில் அஜித்: பஞ்ச தந்திரம் கமல்ஹாசன் போல ஃபிரெஞ்ச் பியர்ட் எல்லாம் வைத்துக் கொண்டு அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் வரும் கலர் கலர் சட்டையை மாட்டிக் கொண்டு வித்தியாசமான லுக்கில் நடிகர் அஜித் இந்த படத்தில் நடிக்கப் போவது உறுதியாகி உள்ளது. மார்க் ஆண்டனி படத்துக்கு பிறகு நிச்சயம் ஒரு மாஸான கமர்ஷியல் படத்தை அஜித்தின் ஒட்டுமொத்த நெகட்டிவ் ஷேடையும் வெளிக்கொண்டு ஆதிக் ரவிச்சந்திரன் உருவாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025ம் ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பில் அஜித் கவனம் செலுத்துவார் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X