Ajith Kumar: தலன்னு கத்திய ரசிகர்கள்.. காதை பொத்திக்கொண்ட அஜித்.. ஓட்டுப்போட்ட போது நடந்த சம்பவம்!

சென்னை: ரசிகர்களின் அன்பு தொல்லையில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே நடிகர் அஜித் 7 மணிக்கு எல்லாம் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை செலுத்தினார்.

நடிகர் அஜித் தனக்கு பின்னாடி வந்து விட்டு முன்னாடி ஓட்டுப் போட எப்படி செல்லலாம் என சீனியர் சிட்டிசன் ஒருவர் வாக்கு வாதம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்தவொரு கூத்து மட்டும் நடக்கவில்லை என்றும் இன்னொரு கூத்தும் நடந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

Ajith Kumar shuts his ears after fans creates noise pollution on polling station

சினிமா பிரபலங்கள் வாக்கு செலுத்த வரும் போது ரசிகர்கள் கூட்டம் மற்றும் மீடியாக்களின் கூட்டம் அவர்களை மொய்க்காமல் விட்டாலே நல்லா இருக்கும் என பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய்யை முந்திய அஜித்: நடிகர் விஜய் இன்று காலை வாக்கு செலுத்த வருவதற்கு முன்னதாக நடிகர் அஜித் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வாக்கு செலுத்தி விட்டு சென்றார். நடிகர் அஜித் தனது வாக்கினை செலுத்தி விட்டு மை வைத்த கை விரலையும் மாஸாக காட்டி ரசிகர்களை ஓட்டுப் போட வாங்க என அழைப்பு விடுத்திருந்தார்.

காலையிலேயே கூட்டம்: நடிகர் அஜித் காலையிலேயே ஓட்டுப் போட்டு விட்டு கூட்டத்தில் இருந்து தப்பித்து விடலாம் என நினைத்து வந்த நிலையில், அப்போதே பெரும் கூட்டம் நடிகர் அஜித்தை சூழ்ந்துக் கொண்டு "தல.. தல" என கூச்சல் போட்டு அவரை ரசிகர்கள் முற்றுகையிட போலீஸார் விரைந்து வந்து அவருக்கு உரிய பாதுகாப்பு அளித்தனர்.

காதை பொத்திய அஜித்: ஏற்கனவே நடிகர் அஜித் ஹாரன் அதிகம் அடிப்பதால் ஏற்படும் ஒலி மாசு (Noise Pollution) குறித்து எல்லாம் பேசியுள்ளார். இந்நிலையில், ரசிகர்கள் காது அருகே வந்து தல.. தலன்னு கத்தி கூச்சலிட்டதும் ஒரு கட்டத்துக்கு மேல் கடுப்பான நடிகர் அஜித் தனது இரு காதுகளையும் விரல் வைத்து பொத்திக் கொண்டு அங்கிருந்து சென்ற காட்சிகள் தீயாக பரவி வருகின்றன.

விடாமுயற்சி: நடிகர் அஜித் தேர்தலில் வாக்கு செலுத்திய நிலையில், உடனடியாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் நாளை முதல் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்கள் குறித்த அப்டேட்களும் வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X