அஜித்துக்கு மட்டுமில்லை.. அவரோட மகன் ஆதிக்குக்கும் குடியரசு தலைவர் கையால் கிடைத்த சூப்பர் பரிசு!

டெல்லி: அஜித் குமார் குறித்த தகவல்கள் தான் கடந்த ஒரு வாரமாக அதிகமாக வந்து கொண்டே உள்ளது. அவரது 25வது ஆண்டு திருமண நாள் கொண்டாட்டத்தில் இருந்து அஜித் குறித்த தகவல்கள்தான் நாள் தோறும் வந்து கொண்டே உள்ளது. பத்மபூஷன் விருது பெறுவதற்கு குடும்பத்துடன் டெல்லிக்குச் சென்ற அஜித் குமார் குடும்பத்தினருக்கு குறிப்பாக அஜித்தின் மகனுக்கு குடியரசுத் தலைவர் சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்துள்ளார்.

அஜித் குமாரை தற்போது நடிகர் என்ற அடையாளத்துடன் மட்டும் அட்டவணைப்படுத்தி விட முடியாது. சர்வதேச அளவில் நடைபெறும் ஜி.டி. 4 ரக கார் ரேஸில் வெற்றிகளைக் குவித்து வரும் ரேஸர். கார் ரேஸிங் அணியின் உரிமையாளர் மற்றும் கேப்டன். இப்படியான நிலையில் அஜித்திற்கு கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு, அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவித்தது. இது அஜித் ரசிகர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது.

இந்நிலையில் நேற்று முன் தினம் அதாவது, ஏப்ரல் 28ஆம் தேதி அஜித் குமார், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் பத்ம பூஷன் விருது பெற்றார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி ட்ரெண்ட் ஆனது. இப்படியான நிலையில் தற்போது, அஜித் குமாரின் மகனான ஆத்விக்கிற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து சூப்பர் பரிசு கிடைத்துள்ளது. அது தொடர்பான புகைப்படங்களை அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Ajith Kumar Son Aadvik Recevies greeting From Prisedent Droupadi Murmu Photos

பத்ம விபூஷன்: அஜித் குமார் பத்ம விபூஷன் விருது பெற கடந்த 27ஆம் தேதி, தனது குடும்பத்துடன் டெல்லிக்கு புறப்பட்டார். மேலும் அஜித் குமார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் பத்ம பூஷன் விருதினைப் பெறும்போது, அஜித்தின் மொத்த குடும்படும் எழுந்து நின்று கைதட்டி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, பூரிப்படைந்தனர். அதன் பின்னர் விருதுடன் குடும்பமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

அஜித் மகன்: இந்நிலையில் தற்போது அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு அஜித்தின் குடும்பம் வணக்கம் சொல்லி மரியாதை செய்கிறார்கள். அப்போது அஜித்தின் மகனான ஆத்விக்கின் இரண்டு கன்னங்களையும் தொட்டு அஜித்தின் மகனிடத்தில் ஏதோ பேசுகிறார். அப்போது அருகில் இருக்கும் அஜித்தின் மகள் அனோஷ்கா மிகவும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டு உள்ளார். அதேபோல் அஜித், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வணங்குகிறார்.

Ajith Kumar Son Aadvik Recevies greeting From Prisedent Droupadi Murmu Photos

அஜித் பிறந்த நாள்: நடிகர் அஜித் குமாருக்கு நாளை 54வது பிறந்த நாள். ரசிகர்கள் அவரது இந்த பிறந்த நாளைக் கொண்டாட தயாராகி வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், குட் பேட் அக்லி படத்தை மீண்டும் தியேட்டரில் சென்று பார்க்க பலரும் திட்டம் தீட்டி வருகிறார்கள். இப்படியான நிலையில், அஜித் தனது வழக்கமான பரிசோதனைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலும் தற்போது வேகமாக பரவி வருகிறது. அஜித் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் வேண்டிக் கொண்டு உள்ளார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X