உலக புகழ் பெற்ற டான்ஸ்.. மைதானத்தில் ஆடிய அஜித் மகன் ஆத்விக்.. செம சென்சேஷனல்.. பக்கா எனர்ஜி
சென்னை: நடிகர் அஜித்குமார் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். மகன் ஆத்விக் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுக்களில் ஆர்வமாக இருக்கிறார் என்பது தெரிகிறது. இந்நிலையில் உலக புகழ் பெற்ற நடனமான இந்தோனேசிய சிறுவன் ஆடிய Aura Framing நடனத்தை ஆத்விக் ஆடி காண்பித்தது பெரிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கோலிவுட்டின் டாப் ஸ்டார்களில் ஒருவரான அஜித்குமார் இந்த வருடத்தில் இரண்டு படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே பெரிய அளவில் ரெஸ்பான்ஸை எதுவும் பெறவில்லை. அடுத்ததாகவும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார். அதில் ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்கலாம் என்று தெரிகிறது. விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவுள்ளது. இது ஒருபக்கம் இருக்க கார் ரேஸிலும் தனது கவனத்தை செலுத்திவருகிறார் ஏகே.

ரொம்பவே பிஸியான ரேஸர்: அவரது ரேஸ் கரியரை பொறுத்தவரை ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நடந்த பந்தயத்தில் தனது டீமோடு கலந்துகொண்டு வெற்றியடைந்தார். மேலும் விருது வென்றையும் பெற்றார். சமீபத்தில்கூட மலேசியாவில் முகாமிட்டு ரேஸில் கலந்துகொண்டார். அப்போது நடிகர் சிம்பு மற்றும் ரசிகர்கள் ரேஸ் நடந்த சர்க்யூட்டுக்கு வந்து ஏகேவை சந்தித்து புகைப்படம் பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்கும் ரசிகர்கள்: அஜித் ரேஸுக்கு போனபோது அவரது ரசிகர்கள் திரைத்துறையில் கொடுத்த அளவுக்கு ஆதரவு கொடுப்பார்களா என்ற சந்தேகம் பலரிடம் இருந்தது. ஆனால் எங்கள் ஏகேவுக்கு நாங்கள்தான் பலம் என்பதை மீண்டும் நிரூபிக்கும் விதமாக உலகத்தில் எந்த நாட்டு ரேஸ் சர்க்யூட்டில் அஜித் நின்றாலும் அவரை சுற்றி இவர்களும் நின்றார்கள். அதை பார்த்து ஒருகட்டத்தில் அஜித்கூட எமோஷனல் ஆகிவிட்டார் என்பது கவனிக்கத்தக்கது.
குடும்பத்தையும் அழைத்து செல்லும் அஜித்: பலர் ஒரு துறையில் இருக்கும்போதே குடும்பத்தை கவனிக்க நேரமில்லை என சொல்வார்கள். அஜித்தோ சினிமா, ரேஸ் என இரண்டு துறைகளில் பிஸியாக இருந்தாலும் எங்கே சென்றாலும் தனது குடும்பத்தை பெரும்பாலும் அழைத்து சென்றுவிடுகிறார். தனது வாழ்வின் அனைத்து முக்கியமான தருணங்களில் மனைவி, மகள், மகன் தன் அருகில் இருக்கும்படியும் பார்த்துக்கொள்கிறார். அவரது இந்த குணமும் அனைவராலும் ரசிக்கப்படுகிறது.
ரீ க்ரியேட் செய்த ஆத்விக்: இந்நிலையில் மைதானத்தின் கேலரி போன்று இருக்கும் ஒரு இடத்தின் கம்பத்தில் ஏறி நின்று; இந்தோனேசியாவில் சிறுவன் ஒருவன் படகில் நின்று ஆடிய Aura Framing நடனத்தை ஆடினார். அதை ரசிகர் ஒருவர் வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பகிர; அது காட்டு தீ போல் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. வீடியோவை பார்த்த ரசிகர்கள், ஆத்விக் செமயா டான்ஸ் ஆடுறாரே.. செம எனர்ஜியா இருக்காரு என்று கமெண்ட்ஸ் செய்து ட்ரெண்டாக்கிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications