Ajith son: குட்டி ரொனால்டோவா மாறிட்டாரே.. கால்பந்தாட்டத்தில் அசத்தும் ஆத்விக் அஜித்.. வேறமாறி!
சென்னை: நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்தாட்டத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.
விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்கிய நிலையில் விரைவில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் அஜித் தனது உலக பைக் டூரை ஆரம்பித்து அதில், அதிக தீவிரம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், அவரது மகன் ஆத்விக்குக்கு கால்பந்தாட்டத்தில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விடாமுயற்சி விரைவில்: ஜனவரி மாதம் துணிவு வெளியான நிலையில், மே மாதம் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு விடாமுயற்சி படத்தின் டைட்டில் வெளியானது. 5 மாதங்கள் ஆன நிலையில், இன்னமும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்கவே இல்லை.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடிக்க விருப்பதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பைக் டூர்: நடிகர் அஜித் கடந்த 5 மாதங்கள் படப்பிடிப்பு தொடங்காத நிலையில், உலகளவில் பைக் டூர் செல்ல வேண்டும் என்கிற தனது ஆசையை நிறைவேற்றி வருகிறார்.

கூடிய சீக்கிரமே சென்னைக்கு வந்து விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. வெறித்தனமாக வொர்க்கவுட் செய்து உடல் எடையையும் கணிசமாக குறைத்து வருகிறார் என்றும் கூறுகின்றனர்.
கால்பந்தாட்டத்தில் கலக்கல்: நடிகர் அஜித் சினிமாவில் மட்டுமின்றி பைக் ரேஸ், டிரோன், சமையல், புகைப்படம் எடுத்தல், துப்பாக்கி சுடுதல் என ஏகப்பட்ட தனித் திறமைகளை கொண்டவர்.
இந்நிலையில், புலிக்கு பிறந்தது பூனையாக இருக்குமா? நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் அஜித் கால்பந்தாட்டத்தில் கலக்கி வருகிறார்.

குட்டி ரொனால்டோ: சென்னையின் எஃப்சி அணியில் ஆத்விக் கால்பந்தாட்ட பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அம்மா ஷாலினி மற்றும் அப்பாவுடன் தனித்தனியே கால்பந்தாட்ட மைதானத்துக்கு ஆத்விக் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், தற்போது தாறுமாறாக கால்பந்தாட்ட விளையாட்டை ஆத்விக் விளையாடி வரும் காட்சிகள் வெளியாகி உள்ளன. ரசிகர்கள் குட்டி ரொனால்டோ மாதிரி குட்டி தல விளையாடுறாரே என கமெண்ட் போட்டு வருகின்றனர். நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் போட்டிகளில் அசத்தி வருவது போல அஜித் மகன் கால்பந்து சாம்பியன் ஆக மாறுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











