Ajith Kumar: மெர்சலாயிட்டேன் மொமண்ட்.. அவார்டு வாங்கிய கையோட அஜித் செய்த முதல் வேலை என்ன தெரியுமா?

சென்னை: நடிகர் அஜித்துக்கு இத்தாலியில் 2025 ஆம் ஆண்டுக்கான ஜெண்டில்மேன் டிரைவர் விருது வழங்கப்பட்டது. இது தொடர்பாக அஜித்தின் மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இது மட்டும் இல்லாமல், அஜித்தின் ரசிகர்கள் பலரும் இணையத்தில் இந்த தகவலை வேகமாக பரப்பி வந்தார்கள். இப்படி இருக்கும்போது, நடிகர் அஜித் குமார் விருது பெற்றதும் முதலில் என்ன செய்தார் என்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்து பார்க்கலாம்.

நடிகர் அஜித் குமார் நடிப்பில் மட்டுமல்ல, கார் ரேசிங் மற்றும் பைக் ரைடிங்கிலும் தீராக் காதல் கொண்டவர் என்பது ரசிகர்கள் அனைவரும் நன்கு அறிந்ததே. 2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தனது சொந்த ரேசிங் அணியான "அஜித் குமார் ரேசிங்" மூலம் உலகின் பல நாடுகளில் நடைபெற்ற உயர்தர கார் ரேஸ் போட்டிகளில் பங்கேற்று, வெற்றிகளைக் குவித்து பல பரிசுகளை வென்றும் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து வருகிறார்.

Ajith Kumar Speech After awarded Gentleman Driver of the Year 2025 Venice Italy

2024 டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்திலேயே அஜித் குமார், தனது இரண்டு பெரிய படங்களான விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகியவற்றின் முழு பணிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டார். குறிப்பாக, டப்பிங் வேலையை வெறும் 2-3 நாட்களில் தொடர்ந்து உட்கார்ந்து செம்மையாக முடித்துக் கொடுத்தார். படப்பிடிப்பின் போதே அவர் தெளிவாகச் சொன்னாராம் - "என் பங்கிற்குரிய எந்த வேலையும் பாக்கி வைக்கக் கூடாது. ஒரு சின்ன வேலையாவது தொங்கிட்டு இருந்தா, நான் ரேசிங்கில் முழு மனசோடு இறங்க முடியாது" என்று. அதன்படியே அனைத்தையும் முழுமையாக முடித்துவிட்டு, மன நிறைவோடு ரேசிங் உலகிற்கு முழு கவனத்தை திருப்பினார் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

சாதனைகள்: அஜித் குமார் ரேசிங் அணி இதுவரை சர்வதேச அரங்கில் அசத்தலாக செயல்பட்டு வருகிறது. இரண்டு முறை மூன்றாவது இடமும், ஒரு முறை இரண்டாவது இடமும் பிடித்து பதக்கங்களை வென்று எடுத்துள்ளது. இதில் 24 மணி நேரம், 12 மணி நேரம் என தொடர்ச்சியாக நடக்கும் கடுமையான என்ட்யூரன்ஸ் ரேஸ்களும் அடங்கும். ஒவ்வொரு வெற்றியும் அஜித்தின் தனிப்பட்ட அர்ப்பணிப்புக்கும், உழைப்புக்கும் சாட்சியாக அமைந்திருக்கிறது.

ஜென்டில்மேன் டிரைவர்: இதனால் தமிழ்நாடு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமை பெற்று வருகிறது. இந்நிலையில், 2025-ஆம் ஆண்டின் மிக உயரிய கவுரவமாக கருதப்படும் "ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர்" விருது அஜித் குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தாலியின் வெனிஸில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், தொழிலதிபரும் புகழ்பெற்ற ரேஸருமான மறைந்த பிலிப் சாரியோலின் நினைவாக அமைக்கப்பட்ட இந்த விருதை, நடிகரும் உண்மையான ரேஸருமான அஜித் குமார் பெற்றுள்ளார் என்பது தமிழ் சினிமாவுக்கே கிடைத்த பெருமை.

Ajith Kumar Speech After awarded Gentleman Driver of the Year 2025 Venice Italy

அஜித் ஸ்பீச்: விருதை வாங்கியதும், அஜித் தனது ரேஸிங் குழுவினருக்கும், இந்திய திரையுலகினருக்கும், குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்தார். அதேபோல், இந்தியாவிலும் இதுபோன்ற கார் ரேஸ்களை எதிர்காலத்தில் நீங்கள் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்தார். மேலும் இந்த ஊக்கம் தன்னை மேலும் சிறப்பாக கார் ரேஸில் கவனம் செலுத்த ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்தார். அவரது இந்த பேச்சு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அஜித் விருது பெற்றது, பேசியது, அதன் பின்னர் தனது இருக்கைக்கு வருவது என அனைத்தையும் ஒரு குழந்தை போல மிகவும் பூரிப்புடன் ஷாலினி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X