மங்காத்தாவை விட 100 மடங்கு இருக்கணும்.. அந்த மனசு தான் சார் அஜித்.. வெங்கட் பிரபு ஷேரிங்ஸ்!

சென்னை: விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் தரமான சம்பவமாக இருக்கும் என வெங்கட் பிரபு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும், நடிகர் அஜித் மற்றும் விஜய் தொடர்ந்து நண்பர்களாகவே பேசி வருகின்றனர் என்றும் கோட் படத்திற்கு அஜித் குமார் தனது பாராட்டுக்களை தெரிவித்தது பற்றியும் வெங்கட் பிரபு வெளிப்படையாக பேசியிருப்பது அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை ஹேப்பி ஆக்கியுள்ளது.

அஜித் மற்றும் விஜய் இருவருக்கும் இடையே தொழில் போட்டி பல ஆண்டுகளாக நிலவி வந்தாலும் இருவரும் நல்ல நண்பர்களாகவே உள்ளனர் என்பதை அவர்களே பல மேடைகளில் கூறியுள்ளனர்.

GOAT Vijay Ajith Kumar

ஆனாலும், தொழில் போட்டி மற்றும் பாக்ஸ் ஆபிஸ் கிளாஷ் காரணமாக விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் அடித்துக் கொள்ளாத குறையாக சோஷியல் மீடியாவில் இரு நடிகர்கள் பற்றியும் மோசமான கமெண்ட்டுகளையும் மீம்களையும் வீடியோ எடிட்களையும் பதிவிட்டு சண்டை போட்டு வருகின்றனர்.

விஜய்யுடன் போனில் பேசிய அஜித்: கோட் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய்யுடன் அஜித் போனில் பேசினார் என்றும் இருவரும் இன்னமும் நண்பர்களாக தொடர்கின்றனர். அதையெல்லாம் பார்க்கும் போது மனசுக்கு ரொம்பவே சந்தோஷமாக உள்ளது. அஜித்துடன் மங்காத்தா படம் பண்ணும் போதே அடுத்து விஜய் படம் பண்ணனும் என ரொம்பவே மோட்டிவேட் செய்தார் என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

மங்காத்தாவை விட 100 மடங்கு: அதுமட்டுமின்றி மங்காத்தா படத்தை விட கோட் படம் 100 மடங்கு அதிகமாக இருக்கணும் என்றும் அஜித் தன்னிடம் கூறியதாகவும் வெங்கட் பிரபு ஓபனாக பேசியுள்ளார். மேலும், கோட் படத்தின் கதை குறித்தும் அந்த பேட்டியில் வெங்கட் பிரபு ஓபன் பேட்டி கொடுத்திருக்கிறார்.

கோட் கதை: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் கதை கற்பனை கதை தான் என்றும் சீக்ரெட் ஏஜென்ட்டுகளாக இருந்த விஜய், பிரசாந்த், பிரபுதேவா மற்றும் அஜ்மல் செய்த ஒரு காரியத்தால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட விஷயங்கள் மற்றும் எதிர்காலத்தில் நடக்கும் விபரீதங்கள், அதை அவர்கள் எப்படி சால்வ் செய்கின்றனர் என்பது தான் கோட் படத்தின் கதை எனக் கூறியுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி: அடுத்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி கோட் திரைப்படம் வெளியாக உள்ளது. விநாயகர் சதுர்த்தி மற்றும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கோட் படம் வெளியாக உள்ள நிலையில், விஜய்க்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக கோட் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை 6 மணிக்கு கோட் படத்தின் டிரெ்ய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். அதிகபட்சமாக சுதந்திர தினமான நாளை மாலை 6 மணிக்கு கோட் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X