Ajithkumar Youtube: யூடியூபில் களமிறங்கிய தல அஜித்.. வெறியர்களே சப்ஸ்கிரைப் பண்ணீட்டீங்களா!
சென்னை: நடிகர் அஜித் குமார் தனது அஜித்குமார் ரேஸிங் அணி மூலம் உலக அரங்கில் ஜி.டி3 வகை கார் ரேஸில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார். அவரது அணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் ரேஸில் கலந்து கொண்டு இதுவரை மூன்று முறை பதக்கங்களை வென்றுள்ளது. அதாவது இவரது அணி இரண்டு முறை மூன்றாவது இடமும் ஒரு முறை இரண்டாவது இடமும் வென்றது. இப்படியான நிலையில் அவரது ரேசிங் அணி சார்பில் யூடியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேனலில் அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்கும் கார் ரேஸ் போட்டிகளை லைவாக காணலாம்.
நடிகர் அஜித்குமார் சினிமாவைக் கடந்து கார் ரேஸ் மீது அலாதி பிரியம் கொண்டவர் என்பது பலருக்கும் தெரிந்ததே. தனது கார் ரேஸ் மீதான ஆசையை நிறைவேற்றிக் கொள்ள சினிமாவிற்குள் வந்துள்ளார் என்றுதான் கூறவேண்டும். அதாவது, சினிமாவில் அஜித்குமார் நடித்துக் கொண்டு இருந்தாலும் இவர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை தனது சிறு வயது கனவான கார் ரேஸை வென்றெடுக்க, செலவு செய்து வருகிறார். கோடிக்கணக்கில் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள அஜித் குமார், தனது ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டு, தன்னை சாதாரண நடிகராக மாற்றிக் கொண்டார்.

ரசிகர்கள் மீது அக்கறை: மேலும், தனது ரசிகர்கள் முதலில் அவர்களது வாழ்க்கையில் வெற்றியாளர்களாக மாறவேண்டும். அதன் பின்னர் அவர்களுக்கு நேரம் இருந்தால் நான் நடிக்கும் சினிமாவை வந்து பார்க்கட்டும் என்று கூறியவர், இன்றளவும் கூறி வருபவர். துபாயில் கார் ரேஸ் நடைபெற்ற போது அவர் அளித்த பேட்டியில், " விஜய் வாழ்க.. அஜித் வாழ்கனு சொல்லீட்டு இருந்தீங்கனா நீங்க எப்போது வாழ்வீங்க, உங்கள் குடும்பம் எப்போது வாழும் என்று" கேள்வி எழுப்பினார். மேலும் நான் எனது ரசிகர்களை அளவுகடந்த நேசிக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
வித்தியாசமான அஜித்: அஜித் குமாரைப் பொறுத்தவரையில், மற்ற சினிமா நடிகர்களை காட்டிலும் மொத்தமாக வித்தியாசமானவர். அதனால் அவரை பலருக்கும் பிடிக்கிறது. தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக உள்ளார். ஆனாலும் எதைப் பற்றியும் அக்கறை கொள்ளாமல், தனது உயரத்தை தாழ்த்திக் கொண்டவர் தல அஜித் குமார் என்று சொல்லும் அளவுக்கு அவரது நடவடிக்கைகள் உள்ளது.

யூடியூப் சேனல்: இப்படியான நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து தனது கார் ரேஸ் அணி மூலம் சர்வதேச நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அஜித் குமார், நமது நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறார். இந்தியாவுக்கு பெருமை தேடிக் கொடுத்த அஜித்குமாருக்கு இந்திய அரசு, பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. அவரது அணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் ரேஸில் கலந்து கொண்டு இதுவரை மூன்று முறை பதக்கங்களை வென்றுள்ளது. அதாவது அவரது அணி இரண்டு முறை முன்றாவது இடமும் ஒரு முறை இரண்டாவது இடமும் வென்றது. இப்படியான நிலையில் அவரது ரேசிங் அணி சார்பில் யூடியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேனலில் அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்கும் கார் ரேஸ் போட்டிகளை லைவாக காணலாம் என்பதால் ரசிகர்கள் அவரது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











