அஜித் கார் ஓட்டுறாரா? இல்லையா? கிளம்பிய குழப்பம்.. சுரேஷ் சந்திரா என்ன சொல்லியிருக்காரு பாருங்க!
சென்னை: நடிகர் அஜித் குமார் கார் ரேஸ் முடியும் வரை அடுத்த படத்துக்கு ஒப்பந்தம் கூட போடமாட்டேன் என நேற்று வரை உறுதியாக பேசிய நிலையில், தற்போது கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் கலந்துக் கொண்டு கார் ஓட்டப் போவதில்லை என்கிற அறிவிப்பை சுரேஷ் சந்திரா வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
53 வயதில் நடிகர் அஜித் குமார் கார் பந்தயத்தில் பங்கேற்க தனது உடல் எடையை எல்லாம் கணிசமாக குறைத்துவிட்டு 24 மணி நேரம் ஓட்டக்கூடிய துபாய் கார் பந்தயத்தில் பங்கேற்க பயிற்சி எடுத்தார். பயிற்சியின் போது நடிகர் அஜித் குமாரின் கார் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்க எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் நடிகர் அஜித் குமார் உயிர் பிழைத்ததாக கூறப்பட்டது.

மேலும், நடிகர் அஜித் குமார் துபாயில் ஆரம்பிக்கப்பட்ட 24 மணி நேர கார் பந்தயத்தில் கலந்துக் கொண்ட காட்சிகளும் வெளியாகின. இந்நிலையில், தற்போது கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் பங்கேற்கவில்லை என்கிற அறிவிப்பு சற்று குழப்பத்துடன் வெளியான நிலையில், அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.
அஜித் குமார் அறிவிப்பு: அஜித் குமார் ரேசிங் டீமின் ஓனராக இருக்கும் அஜித் குமார் தனது அணியின் நலன் கருதி கார் பந்தயத்தில் தொடர்ந்து கார் ஓட்டப்போவதில்லை என விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். டீம் ஓனராக மட்டும் நடிகர் அஜித் குமார் தொடர்ந்து இந்த போட்டியில் பங்கேற்பார் என்கின்றனர். 240 கிலோ மீட்டர் வேகத்தில் கார் பந்தயத்தில் 24 மணி நேரமும் கார் ஓட்ட வேண்டும் என்பதால், வேகம் குறைவு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவை அஜித் எடுத்திருக்கலாம் என்கின்றனர்.

ரசிகர்கள் குழப்பம்: பயிற்சியின் போது ஏற்பட்ட கோர விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கிய நிலையிலும் அஜித் குமார் எந்தவொரு காயமும் இன்றி உயிர் தப்பினார் என்றே அறிவிப்புகள் வெளியாகின. மேலும், அஜித் குமார் கார் பந்தயத்தில் பங்கேற்றதையும் ரசிகர்கள் பார்த்து ஃபயர் விட்டு வந்தனர். துபாயில் நடக்கும் கார் பந்தயத்தில் அஜித் குமார் கார் ஓட்டுவதை காண ஏகப்பட்ட அஜித் ரசிகர்கள் நேரில் சென்று பார்த்து அரங்கையே அதிர விட்டு வந்தனர். இந்நிலையில், வெளியான அறிவிப்பு ரசிகர்களை குழப்பியது.

அஜித் குமார் கார் ஓட்டுகிறார்: அஜித் குமார் ரேஸிங் எனும் தனது டீமின் நலன் கருதி கார் ரேஸில் இருந்து விலகுவதாக அறிவித்த அஜித் குமார் ரஸூன் என்கிற இன்னொரு அணியில் 4 டிரைவரில் ஒருவராக கார் ஓட்டப் போவதாக விளக்கம் அளித்துள்ளனர். நடிகர் அஜித் இன்னும் சற்றுநேரத்தில் கார் பந்தயத்தில் பங்கேற்பார் என்றும் சுரேஷ் சந்திரா விளக்கம் கொடுத்து அஜித் ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











