கிளட்ச்ச இப்படி பிடிக்காத?.. ரியல் மாஸ்டரான அஜித் குமார்.. பைக் ஓட்ட எப்படி சொல்லித்தராரு பாருங்க!

சென்னை: உலகில் பல்வேறு நாடுகளுக்கு பைக் டூர் சென்றுள்ள நடிகர் அஜித் தற்போது தனது டீமில் உள்ள இளைஞர்களுக்கு பைக் ஓட்ட சொல்லிக் கொடுத்து வருகிறார். அதன் வீடியோவை தற்போது சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் அஜித் குமார் 'விடாமுயற்சி' படத்திற்காக அஜர்பைஜானில் பல நாட்கள் கஷ்டப்பட்டு நடித்து வந்தார். ஆனால், அவரது வேல்வ்யூவான கால்ஷீட்டை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் இயக்குநர் மகிழ் திருமேனி காலதாமதம் செய்து விட்டார் என ரசிகர்கள் இயக்குநர் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகின்றனர்.

Ajith Kumar teaches youngster to ride bike video goes trending

அடுத்ததாக விரைவில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள 'குட் பேட் அக்லி' படத்தில் இன்னும் ஓரிரு மாதத்தில் அஜித் கலந்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பைக் பிரியர் அஜித்: பலமுறை விபத்துக்கள் ஏற்பட்டாலும், உடம்பில் பல முறை அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டாலும் தொடர்ந்து தனது விருப்பமான பைக் ரைடிங் நடிகர் அஜித் விடவே இல்லை. அதில் அடுத்த கட்டத்தை அடைய வேண்டும் என உலகம் முழுவதும் பைக் டூர் செல்ல போகிறேன் என அறிவித்திருந்தார். இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றி வந்த அஜித் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் பைக் ரைடு சென்றுள்ளார்.

விடாமுயற்சி தாமதம்: லைகா தயாரிப்பில் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் கடந்த மே 1-ஆம் தேதி டைட்டில் அறிவிக்கப்பட்டு மகிழ் திருமேனி தான் அந்த படத்தை இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மார்ச் மாதமே தற்போது முடிய உள்ள நிலையில் இன்னும் ஒரு மாதம் ஆனால் கிட்டத்தட்ட அந்த படத்தின் டைட்டில் லுக் வெளியாகி ஓராண்டு கடந்துவிடும் என்கின்றனர். இன்னமும் விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்டப் பணிகளை லைகா நிறுவனம் ஆரம்பிக்கவில்லை. அஜித் தற்போது தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு மீண்டும் பைக் டூர் கிளம்பிவிட்டார்.

பைக் ஓட்ட சொல்லித் தரும் அஜித்: உலக அளவில் பல்வேறு விதமான விலை உயர்ந்த பைக்குகள் நடிகர் அஜித்திடம் உள்ளன. மேலும் ஏகப்பட்ட பைக்குகளையும் நடிகர் அஜித் ஓட்டி இருக்கிறார். இந்நிலையில், அடுத்து வரும் இளைஞர்களுக்கு பைக் ஓட்ட சொல்லித் தரும் ஆசிரியராகவே தற்போது அஜித் மாதிரி இருக்கிறார். ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்தில் டிரோன் தொழில்நுட்பத்தை அஜித் சொல்லிக் கொடுத்து அந்த மாணவர்கள் பல்வேறு சாதனைகளை படைத்தது குறிப்பிடத்தக்கது. கிளட்ச் இப்படி பிடிக்கக் கூடாது, இப்படி பேலன்ஸ் பண்ணி ஓட்டுங்க என அஜித் இளைஞர் ஒருவருக்கு சொல்லித் தரும் வீடியோ அஜித் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

செம ஃபிட்: நடிகர் அஜித்துக்கு என்ன ஆனது என பதறி ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை சமீபத்தில் பிரார்த்தனை செய்தனர். ஆனால், அதெல்லாம் ஒன்றும் இல்லை நான் செம ஃபிட்டாக இருக்கிறேன் என்றும் தொடர்ந்து பைக் ஓட்டும் புகைப்படங்களையும் காட்சிகளையும் வெளியிட்டு ரசிகர்களை ஹேப்பியாக்கி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X