Don't Miss!
- News
ஜெயலலிதா சொத்துக்கு வந்த புது "பங்குதாரர்!" சென்னை உயர்நீதிமன்றத்தில் "அண்ணன்" மைசூர் வாசுதேவன் மனு
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- Finance
பட்ஜெட் 2023: இதற்கு தான் முக்கியத்துவம் தரனும் - ப. சிதம்பரம்..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Thunivu Box Office Collections Day 6: பொங்கல் விடுமுறையை வேட்டை ஆடிய அஜித்.. துணிவு வசூல் இவ்வளவா?
சென்னை: நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் 6 நாட்களில் மிகப்பெரிய வசூல் வேட்டையை ஆடியுள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. ஜனவரி 11ம் தேதி வெளியான நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் காணும் பொங்கலான இன்று வரை ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக பல திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.
நடிகர் அஜித் ஆக்ஷனில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு இந்த முறை தெறிக்கவிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் துணிவு படத்தை இந்த பொங்கலுக்கு பார்த்து கொண்டாடி வருகின்றனர்.
அஜித், மஞ்சு வாரியரை கடந்து பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் மற்றும் பிளாஷ்ஃபேக்கில் வரும் 'கனா' தர்ஷன் உள்ளிட்டவர்களின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Thunivu
Box
office
worldwide:
ரியல்
பொங்கல்
ஆரம்பம்...
வசூலில்
விஸ்வரூபமெடுத்த
துணிவு

அஜித் ஆட்டம்
விமர்சனங்களை எல்லாம் விளாசி எடுக்கும் அளவுக்கு இந்த படத்தில் மைக்கேல் ஜாக்சன் எனும் புனை பெயருடன் முதல் பாதி முழுக்க வங்கியை தன் வசம் வைத்துக் கொண்டு அஜித் போடும் ஆட்டத்தை பார்த்தாலே போதும் அவரது ரசிகர்கள் கூஸ்பம்ப்ஸ் அடைந்து விடுவார்கள். இதே போல அஜித்தின் லுக் அடுத்தடுத்த படங்களிலும் ரசிகர்களை ஈர்த்தால் போதும் ஏகப்பட்ட வசூலை உலகம் முழுக்க படம் கலெக்ஷன் செய்யும் என்பதில் எந்தவொரு மாற்று கருத்தும் இல்லை.

அதிகரிக்கும் வசூல்
துணிவு படம் புதன் கிழமை வெளியான நிலையில் முதல் நாள் ரசிகர்கள் காட்சி அட்டகாசமான வசூலை வாரிக் குவித்தது. அதன் பிறகு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை கொஞ்சம் வசூல் சரிவை சந்தித்த நிலையில், சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் என இன்று வரை திரையரங்கம் முழுவதும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக மாறி துணிவு படத்தின் வசூல் அதிகரித்து வருகிறது.

100 கோடி கிளப்
இந்த பொங்கலுக்கு வெளியான வாரிசு மற்றும் துணிவு இரு படங்களும் 100 கோடி கிளப்பில் இணைந்து விட்டன. விஜய்யின் வாரிசு அதிகாரப்பூர்வமாக 150 கோடி ரூபாயை 5 நாட்களில் கடந்து விட்டதாக தயாரிப்பு நிறுவனமே அறிவித்து விட்டது. ஆனால், இந்த பக்கம் போனி கபூர் இன்னும் அறிவிக்கவில்லை. இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 நாட்களில் துணிவு திரைப்படம் 112 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கணிப்புகள் வெளியாகி உள்ளன.

130 கோடி வசூல்
விஜய்யின் வாரிசு படத்துடன் பல இடங்களில் கலெக்ஷனில் சரிசமமாக அஜித்தின் துணிவு திரைப்படமும் போட்டி போட்டு வருகிறது. இதற்கு முன்னதாக இல்லாத அளவுக்கு இந்த முறை வெளிநாடுகளில் அஜித்தின் துணிவு திரைப்படம் நல்ல வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. இதுவரை 130 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டையை துணிவு அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.