Ajithkumar: 20 ஆண்டுகளுக்குப் பின்னர் அஜித் எடுத்த அந்த முடிவு.. அம்பானி போட்ட கிளியர் ஸ்கெட்சா?
சென்னை: நடிகர் அஜித் குறித்த பேச்சுக்களில் மிகவும் முக்கியமான பேச்சு, அவர் விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பதுதான். ஆரம்பத்தில் நடித்திருந்தாலும் ஒரு காலகட்டத்திற்கு பின்னர் அவர் விளம்பரங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார். அப்படி இருக்கையில் அவர் மீண்டும் இரண்டு விளம்பரங்களில் நடிக்க உள்ளார் என்ற தகவலை வலைபேச்சு அந்தணன் பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இது தொடர்பாக வலைபேச்சு யூடியூப் பக்கத்தில், " அஜித் தற்போது மலேசியாவில் உள்ளார். பில்லா படத்தில் இடம் பெற்ற சேவற்கொடி பறக்குதடா பாடல் படமாக்கப்பட்ட முருகன் கோயிலுக்குச் சென்று வணங்கி விட்டு முக்கியமான வேலை ஒன்றைச் செய்யவுள்ளார். அதாவது கேம்பா கோலா விளம்பரத்தில் நடிக்க உள்ளார். அதன் படப்பிடிப்புகளும் அங்கு நடைபெறுகிறது. அதேபோல், ஒரு ரியல் எஸ்டேட் விளம்பரத்திலும் நடிக்கவுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
அஜித் விளம்பரங்களில் நடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக கடந்த 2005ஆம் ஆண்டு நெஸ்கேஃப் சன்ரைஸ் காபி விளம்பரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் 20 ஆண்டுகளாக விளம்பரங்களில் நடிக்காமல் இருந்தார். இப்படி இருக்கும்போது தற்போது மீண்டும் விளம்பரங்களில் நடிக்க வருகிறார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்றால், அஜித்தின் அஜித் குமார் ரேஸிங் அணிக்கு அதிகாரப்பூர்வ விளம்பரதாரராக ரிலையன்ஸ் நிறுவனம் செயல்பட ஒத்துக் கொண்டது. இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கேம்பா கோலா நிறுவனத்தில் அஜித் நடிக்கிறார் என்பது இது முன்கூட்டியே போடப்பட்ட ஒப்பந்தமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

விருது: நடிகர் அஜித்துக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர், 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஜென்டில்மேன் டிரைவர் விருது வழங்கப்பட்டது. இந்த விருது இத்தாலியில் வழங்கப்பட்டது. இதை பெறுவதற்காக தனது குடும்பத்துடன் இத்தாலிக்குச் சென்று வாங்கினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அஜித்தின் மனைவி ஷாலினி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டார்.
விருது: அஜித்தின் கார் ரேஸ் அணி, இந்த ஆண்டு நடைபெற்ற கார் ரேஸ் பந்தயங்களில், இதுவரை இரண்டு முறை மூன்றாவது இடத்தையும், ஒருமுறை இரண்டாவது இடத்தையும் வென்றுள்ளது. இதில் 24 மணி நேர பந்தயங்கள், 12 மணி நேர பந்தயங்கள் என்று இரண்டு வகைகளில் பந்தயங்கள் நடைபெற்றது.
பெருமை: அஜித் விருது வாங்கியதும், தனது ரேஸிங் குழுவினருக்கும், இந்திய திரையுலகினருக்கும், குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்தார். அதேபோல், இந்தியாவிலும் இதுபோன்ற கார் ரேஸ்களை எதிர்காலத்தில் நீங்கள் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்தார். மேலும் இந்த ஊக்கம் தன்னை மேலும் சிறப்பாக கார் ரேஸில் கவனம் செலுத்த ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











