விடாமுயற்சி.. டூப் போடாமல் உயிரை பணயம் வைத்த அஜித்.. கார் எப்படி கவிழ்ந்து கிடக்குது பாருங்க!

சென்னை: விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை நடிகர் அஜித் தொடங்கவில்லை என ட்ரோல்கள் பறந்துக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த நவம்பர் மாதம் விடாமுயற்சி படத்துக்காக நடிகர் அஜித் தனது உயிரை பணயம் வைத்து எப்படி நடித்துள்ளார் பாருங்க என லைகா தரப்பு வீடியோ வெளியிடுவதற்கு முன்பே சுரேஷ் சந்திரா சற்றுமுன் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நடிகர் அஜித் குமார் உடல் முழுக்க ஏகப்பட்ட காயங்கள் உள்ளன. பல இடங்களில் அறுவை சிகிச்சைகளையும் செய்துள்ளார். ஆனால், அதையெல்லாம் மீறி தனது ரசிகர்களுக்காக அவர் எந்தளவுக்கு ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் பாருங்க என சுரேஷ் சந்திரா இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Ajith Kumar took high life risk for Vidamuyarchi stunt scene out now

விரைவில் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், விடாமுயற்சி படத்தில் இருந்து பிரத்யேக காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஹை ரிஸ்க் எடுத்த அஜித்: சினிமாவில் கார்கள் பறப்பது, விபத்து நடப்பது எல்லாம் சர்வ சாதாரணமாக நடப்பது போல காட்டுகின்றனர். ஆனால், அதற்கு பின்னால் ஸ்டண்ட் இயக்குநர்கள் மற்றும் ஸ்டண்ட் நடிகர்களின் கடினமான உழைப்பு உள்ளது. கார், பைக் ஓட்டுவதில் கில்லாடியான அஜித் குமார் ஹை ரிஸ்க் எடுத்து விடாமுயற்சி படத்துக்காக செய்திருக்கும் ஸ்டண்ட் காட்சி வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

Ajith Kumar took high life risk for Vidamuyarchi stunt scene out now

ஆரவ்வுக்கு அல்லு இல்லை: பிக் பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னரான ஆரவ் நடிகர் அஜித் குமார் அருகே அந்த காரில் அவரும் டூப் ஏதும் பயன்படுத்தாமல் நடித்துள்ளார். இத்தனைக்கும் அவரது கைகள் சங்கிலியால் கட்டப்பட்டுள்ள நிலையில், உண்மையாகவே கார் அந்தர் பல்டி அடித்து விபத்துக்குள்ளாகும் காட்சியில் அவரை நடிக்க வைத்து அஜித் குமார் மாஸ் காட்டியிருக்கிறார்.

Ajith Kumar took high life risk for Vidamuyarchi stunt scene out now

வலிமை படத்தில்: எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான வலிமை படத்தில் பைக் ஓட்டும் காட்சியில் நடிகர் அஜித் குமாருக்கு விபத்து ஏற்பட்ட காட்சிகளையும் படம் வெளியாகும் முன்னரே வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர். இந்நிலையில், தற்போது விடாமுயற்சி படத்தில் அஜித் எடுத்த ஹை ரிஸ்க் காட்சியை வெளியிட்டுள்ளனர்.

மில்லியன் கணக்கில் வியூஸ்: சுரேஷ் சந்திரா வெளியிட்ட விடாமுயற்சி படத்தின் விபத்து வீடியோவை 15 நிமிடத்தில் 2.3 மில்லியன் ரசிகர்கள் பார்த்து விட்டனர். கண்டிப்பாக 24 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளை கடந்து இந்த வீடியோ டிரெண்டாகி விடும் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை.

Ajith Kumar took high life risk for Vidamuyarchi stunt scene out now

விரைவில் விடாமுயற்சி: கடந்த நவம்பர் மாதம் அஜர்பைஜானில் படமாக்கப்பட்ட விபத்துக் காட்சி ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், விரைவில் விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என தெரிகிறது. அதற்கான முன்னோட்டமாகவே தொடர்ந்து நடிகர் அஜித்தின் புகைப்படங்களும் வீடியோக்களும் பப்ளிசிட்டி ஸ்டண்டாக வெளியாகி வருகின்றன.

குட் பேட் அக்லி: விடாமுயற்சி படத்துக்காக அஜித் குமார் இப்படி ரிஸ்க் எடுத்து நடித்துள்ளதை பார்த்தால் ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லி படத்தில் மேலும், அதிகப்படியான ரிஸ்க் காட்சிகளை தாராளமாக வைப்பார் என்றே தெரிகிறது. இந்த வயதிலும் ரசிகர்களுக்காக ரிஸ்க் எடுத்து சிஜியோ டூப்போ பயன்படுத்தாமல் ஒரிஜினலாக அஜித் நடித்துள்ளதை பார்த்து திரையுலகமே ஆடிப்போய் விட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X