ப்பா.. அர்ஜுன் மட்டுமில்லை.. அந்த ஹீரோயினையும் விடல.. விடாமுயற்சி சூட்டிங்ஸ்பாட்டில் அஜித் ரகளை!
சென்னை: நடிகர் அஜித் மீண்டும் மங்காத்தா வைபில் செம ஆக்டிவாக உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கு காரணம் அந்த படத்தில் நடித்த அர்ஜுன், திரிஷா உள்ளிட்டோர் உடன் மீண்டும் இணைந்து நடித்து வருவது தான் என்றும் கூறுகின்றனர்.
எப்போதுமே தன்னுடன் நடிக்கும் நடிகர்களை ஜாலியாக வைத்திருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி சூட்டிங் ஸ்பாட்டில் ஸ்டில் போட்டோகிராஃபராகவே மாறிவிட்டார் என்கின்றனர்.

நடிகர் அர்ஜுனை அஜித் எடுத்த போட்டோ வெளியான நிலையில், தற்போது அந்த படத்தில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகளையும் அவர் போட்டோ எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.
ஹேப்பி மூடில் அஜித்: மீண்டும் உடல் எடையை குறைத்து செம ஹேப்பியாக விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும், ரெஜினா கசாண்ட்ரா, அர்ஜுன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். பிக் பாஸ் ஆரவ் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். அஜர்பைஜானில் மொத்த படமும் உருவாகி வருகிறது.
அர்ஜுன்: லியோ படத்தைத் தொடர்ந்து ஆக்ஷன் கிங் அர்ஜுன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மங்காத்தா படத்திற்கு பிறகு மீண்டும் அர்ஜுன் உடன் இணைந்து நடித்து வரும் நிலையில், நைட் நேரத்தில் இருவரும் பைக் ரைடு எல்லாம் சென்று வருகின்றனர். சமீபத்தில் அர்ஜுனை போட்டோ எடுத்த ஸ்டில் வெளியான நிலையில், தற்போது மேலும், பல நடிகர்களை அஜித் க்ளிக் செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
ரெஜினா கசாண்ட்ரா: சமீபத்தில் சதீஷ் உடன் இணைந்து கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தில் நடித்த ரெஜினா கசாண்ட்ரா அடுத்து அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அவர் கண்ணாடியை பார்த்து மேக்கப் போட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கே தெரியாமல் போட்டோ பிடித்துள்ளார் அஜித்.
இயக்குநர் செமையா இருக்காரே: மேலும், ஆர்ட் டைரக்டர் கிரண் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி உள்ளிட்டோரையும் அஜித் க்ளிக் செய்த போட்டோக்கள் வெளியாகி உள்ளன. திரிஷா எங்கே பாஸ் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அஜித்துடன் ஜீ, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் உள்ளிட்ட பல படங்களில் நடித்த திரிஷா மீண்டும் அஜித்துடன் இணைந்து நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











