விடாமுயற்சி படத்தில் அஜித்திற்கு ஜோடி யாரு தெரியுமா? அட செம ஜோடியாச்சே!
சென்னை : விடாமுயற்சி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மாஸான நடிகை ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
எச் வினோத் இயக்கிய துணிவு படம் ஜனவரியில் வெளியாகி வெற்றி பெற்றது
இப்படத்தில் அஜித் வங்கியை கொள்ளை அடிக்கும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில நடித்திருந்தார்.

அஜித் 62 : துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அஜித் 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், விக்னேஷ் சிவனின் கதை அஜித்திற்கு பிடிக்காததால், மகிழ் திருமேனியிடம் படத்தின் ஒன் லைன் கதையை கேட்டு ஒகே சொல்லி இருக்கிறார். இருப்பினும் அஜித்தின் 62 படத்தின் இயக்குநர் யார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை
விடாமுயற்சி : இதையடுத்து அஜித்தின் பிறந்த நாளான மே 1ந் தேதி அஜித் 62 படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு விடாமுயற்சி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.படத்தின் தலைப்பு வெளியானதில் இருந்து படத்தின் கதை என்ன, ஹீரோயின் யார், படப்பிடிப்பு எப்போது என ரசிகர்கள் விடாமுயற்சி படம் குறித்த அப்டேட்டை கேட்டு வருகின்றனர்.
ஹீரோயின் இவரா : இந்நிலையில், விடாமுயற்சி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மக்களை கவர்ந்த குந்தவை திரிஷா, விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

எதிர்பார்ப்பில் பேன்ஸ் : அஜித் நடித்த வலிமை , துணிவு படத்தில் கதாநாயகிகள் இருந்தாலும், அவர்கள் தோழிகளாகவே நடித்திருந்தனர். விடாமுயற்சி படத்திலாவது அவருக்கு ஜோடி இருந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் திரிஷா இருவரும் ஜீ படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், விடாமுயற்சி படத்திலும் அஜித்துடன் திரிஷா இணைந்து நடித்தால் சூப்பராக இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.
அடுத்தாண்டு ரிலீஸ் : அஜித்துக்கு ஜோடியாக நடிப்பதற்கு ஐஸ்வர்யா ராய், கங்கனா ரணாவத், கத்ரினா கைப், கரீனா கபூர் ஆகிய நடிகைகளிடம் கதை சொல்ல தேதி கேட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பரிசீலனையில் இருக்கும் 5 நடிகைகளில் யார் விடாமுயற்சி படத்தில் கமிட்டாக போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











