அடக்கடவுளே அடுத்து ரஜினி படம் ஓடினால் தான் அஜித் படத்துக்கு விடிவு காலமா?.. என்ன இப்படி ஆகிடுச்சு?

சென்னை: அஜித்தின் "விடாமுயற்சி" படத்திற்கு இதற்கு மேல் செலவு செய்ய முடியாது என்கிற நிலைமைக்கு லைகா நிறுவனம் வந்துவிட்டதாக சினிமா வட்டாரத்தில் பரவலான பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. இப்போதைக்கு விடாமுயற்சி படத்திற்கு செலவு செய்ய வேண்டாம் என்றும் அதை கொஞ்ச காலம் கிடப்பில் போடலாம் என்கிற முடிவுக்கு தயாரிப்பு நிறுவனம் வந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

லைகா தயாரிப்பில் வெளியான சமீபத்திய படங்கள் தொடர்ந்து வசூல் ஈட்டாமல் தோல்வியை கொடுத்து வரும் நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் "வேட்டையன்" படத்தை மட்டுமே பெரிதாக அந்த நிறுவனம் நம்பி வருவதாக கூறுகின்றனர்.

Ajith Kumar Vidamuyarchi in big trouble Lyca now concentrate only on Vettaiyan

ஏமாற்றிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: அப்பா ரஜினிகாந்தை வைத்து தரமான படத்தை கொடுக்கிறேன் என லைகா நிறுவனத்திடம் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று "லால் சலாம்" படத்தை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன வாக்கை காப்பாற்றவில்லை என்றும் படம் படுதோல்வியை சந்தித்த நிலையில் பல கோடிகள் அந்த நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறுகின்றனர். அந்த படத்தின் தோல்வியை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டு அடுத்த படத்துக்காக தயாரிப்பாளரை தேடிக் கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.

பிரச்சனையில் "விடாமுயற்சி": முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல விக்னேஷ் சிவனை வைத்து ஏகே 62 படத்தை ஆரம்பித்த அஜித் அவரை வெளியேற்றிவிட்டு தனது 62 ஆவது படத்தை மகிழ் திருமேனியை வைத்து இயக்க வைத்தார். "விடாமுயற்சி" என்கிற தலைப்பை படத்துக்கு எந்த நேரத்தில் வைத்தாரோ விடாமல் முயற்சி செய்து கொண்டே இருக்கிறார் மகிழ் திருமேனி. லைகா தயாரிப்பில் பிரம்மாண்ட "பொன்னியின் செல்வன்" படத்தையே மூன்று முதல் நான்கு மாதத்தில் முடித்து விட்டார் மணிரத்னம். ஆனால் படத்தின் அறிவிப்பு வெளியாகி 300 நாட்கள் ஆகியும் அப்டேட் வரவில்லையே என அஜித் ரசிகர்கள் பேனர் வைத்து போராட்டம் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.

கிடப்பில் "விடாமுயற்சி"?: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் இதைப்போலவே சர்ச்சையை கிளப்பிய நிலையில், சில ஆண்டுகள் அந்த படத்தை கிடப்பில் போட்டு வைத்தார் லைகா சுபாஸ்கரன். இந்நிலையில், அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கும் தற்போது அதுதான் நிலைமை என அதிர்ச்சி கிளப்புகின்றனர்.

Ajith Kumar Vidamuyarchi in big trouble Lyca now concentrate only on Vettaiyan

"வேட்டையன்" வெற்றி பெற்றால் தான்: ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாபச்சன், ராணா டகுபதி, பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் உருவாகி வரும் வேட்டைக்காரன் திரைப்படத்திற்கு மட்டும் தற்போது பணத்தை செலவு செய்து உருவாக்கலாம் என்கிற முடிவுக்கு லைகா வந்திருப்பதாக கூறுகின்றனர். அந்த படத்தை பெரிய தொகைக்கு வியாபாரம் செய்தால், அதன் பின்னர் விடாமுயற்சி படத்தை பார்க்கலாம் என்றும் லைகா நிறுவனம் கூறிவிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறு பட்ஜெட் படங்கள்: மேலும் "விடாமுயற்சி" போல பெரிய பட்ஜெட் படங்களை இப்போதைக்கு எடுக்க வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்திருப்பதாகவும் சிறு பட்ஜெட் படங்கள் மீது ஆர்வம் செலுத்த போவதாகும் தகவல்கள் வெளியாகி உள்ளன. "இந்தியன் 2" திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் "விடாமுயற்சி" படத்திற்கான விடிவுகாலம் பிறக்கும் எனக் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X