விடாமுயற்சி அப்டேட்... வாவ்.. என்னம்மா இருக்காரு அஜித்.. டிரெண்டாகும் போட்டோ!

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் மாஸான அப்டேட்டை படக்குழு சற்று முன் வெளியிட்டுள்ளது. அஜித்தின் ரசிகர்கள் இந்த போஸ்டரை இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

அஜித் நடித்த துணிவு திரைப்படம் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியானது. இதைத் தொடர்ந்து அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் கமிட்டானார். இப்படத்திற்கு விடாமுயற்சி என்று பெயர் வைத்திருப்பதாக கடந்த ஆண்டு மே மாதம் அஜித்தின் பிறந்த நாள் அன்று அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது, இப்படத்தின் பட ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.

ajith kumar Vidamuyarchi thrisha

விடாமுயற்சி: அதுமட்டுமில்லாமல், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடியாமலே அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள குட் பேட் அக்லி படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவதால், ஒரு கட்டத்தில் விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் பரவியது. இதனால், ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்த நிலையில், கடந்த மாதம் விடாமுயற்சி படப்பிடிப்பு மீண்டும் அஜர்பஜானில் தொடங்கியது. ஒட்டு மொத்தமாக படத்தை இரண்டு ஆண்டுகளாக எடுத்துத் வருவதால் படம் இந்தியன் 2 மாதிரி நெகடிவ் விமர்சனத்தை பெற்றால் என்ன செய்வது என வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர் ரசிகர்கள்.

விடாமுயற்சி அப்டேட்: இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5.05 மணிக்கு வெளியாகும் என லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், சற்று முன் விடாமுயற்சி படத்தின் மூன்றாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், த்ரிஷா அமர்ந்து இருக்க அஜித் இளமையான லுக்கில் இருக்கிறார். படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டாக இது இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், படக்குழு வெறும் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இருந்தாலும் வந்த வரைக்கும் லாபம் என இந்த போஸ்டரை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

அஜித்,த்ரிஷா: இப்படத்தில் நடிகர் அஜித்குமாருடன் த்ரிஷா, ஆரவ், அர்ஜூன், பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரெஜினா ஆகியோர் நடிக்கின்றனர். அஜித், த்ரிஷா கூட்டணியில் நான்கு ஹிட் படங்கள் வெளியாகி உள்ள நிலையில், தற்போது இருவரும் ஐந்தாவது முறையாக இணைந்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு நீரவ்ஷா மற்றும் ஓம் பிரகாஷ் இருவரும் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். கொஞ்சம் ஆக்‌ஷன், த்ரில்லர் போன்ற பல சுவாரஸ்யங்கள் இருக்கும். அஜித்தை வைத்து தரமான ஒரு படத்தைத் தான் கொடுப்பார் என்று சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X