லெஜண்ட் தான் கார் ஓட்டுவாங்க.. குழந்தைங்களாம் இப்படித்தான் விளையாடும்.. ரசிகர்கள் சண்டை ஸ்டார்ட்!

சென்னை: நடிகர் விஜய் 'கோட்' படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ள நிலையில் அங்கே கிட்ஸ் ஸ்கூட்டரை வைத்து விளையாடிய வீடியோ காட்சிகள் நேற்று வெளியாகின. அதைப் பார்த்து அஜித் ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்து வரும் நிலையில், சிம்பதி குமார் அஜித் என பதிலுக்கு விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

அஜித் மற்றும் விஜய் இடையே ஆரம்பத்தில் இருந்து சினிமாவில் போட்டி நிலவி வருகிறது. அட்டகாசம் படத்தில் இடம்பெற்ற "உனக்கென்ன" பாடலையே நடிகர் விஜய்யை அட்டாக் செய்யும் விதமாக வைக்க சொன்னார் அஜித் என சமீபத்திய பேட்டியில் அந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பண்ணியிருந்தார்.

Ajith Kumar vs Vijay fans started fans fight over Vidamuyarchi and GOAT shooting spot videos

கடந்த ஆண்டு வாரிசு படத்துக்கு போட்டியாக அஜித் தனது துணிவு படத்தை ரிலீஸ் செய்தார். ஆனால் அந்த படம் வாரிசு படத்தை விட குறைவாகவே வசூல் செய்தது அஜித்தை கடும் அப்செட்டில் ஆழ்த்தியது என தகவல்கள் வெளியாகின.

விடாமுயற்சி விபத்து: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படம் லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. அஜர்பைஜானில் பல மாதங்கள் அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், கடந்த சில மாதங்களாக படத்துக்கு பிரேக் விடப்பட்டுள்ளது. விடாமுயற்சி படமே டிராப் ஆகிவிட்டதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், விடாமுயற்சி படத்திற்காக நடிகர் அஜித் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு டூப் போடாமல் கார் விபத்து ஸ்டன்ட் காட்சியில் நடித்து இருந்தார் என்பதை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டு இருந்தார்.

அஜித்துக்கு போட்டியா விஜய்: நடிகர் அஜித் ஒரு வீடியோ வெளியிட்டதும் விஜய் தரப்பில் இருந்து ஒரு வீடியோ வந்துடுச்சு பாருங்க என அஜித் ரசிகர்கள் கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டனர். அஜித் குமார் கஷ்டப்பட்டு கார் ஓட்டி விபத்துக்குள்ளாகும் வீடியோவை வெளியிட்ட நிலையில், தளபதி விஜய் செம கூலாக குழந்தைகள் ஓட்டும் தள்ளுவண்டி ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு செல்லும் வீடியோவை ரிலீஸ் செய்ததே அஜித்தை வெறுப்பேற்றத்தான் என சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் சண்டை வெடித்துள்ளது.

லெஜண்ட்ஸ் கார் ஓட்டுவாங்க: அஜித் போன்ற லெஜண்ட்ஸ் ஹம்மர் கார் ஓட்டி டூப் போடாமல் ஸ்டன்ட் செய்வார்கள். குழந்தைங்க தான் குழந்தைங்க ஸ்கூட்டரை ஓட்டும் என அஜித் ரசிகர்கள் விஜய்யின் வீடியோவை ட்ரோல் செய்து வருகின்றனர். அதை பார்த்த விஜய் ரசிகர்கள் அஜித்தை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

சிம்பதி தேடும் அஜித்: நடிகர் அஜித் குமாரை சிம்பதி குமார் அஜித் என பதிலுக்கு விஜய் ரசிகர்கள் கலாய்த்து கார் ஓட்ட தெரியாமல் ஆக்சிடன்ட் செய்து விட்டு இதுல பெருமை வேற என பங்கமாக கலாய்த்து வருகின்றனர். ரஜினிகாந்த் மற்றும் விஜய் இடையே போட்டி நிலவி வந்த நிலையில், மீண்டும் அஜித் vs விஜய் ரசிகர்கள் இடையே சண்டை வெடித்து வருகிறது.

கோட் vs விடாமுயற்சி கிளாஷ்?: இந்த ஆண்டு தீபாவளிக்கு விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மற்றும் அஜித் குமாரின் விடாமுயற்சி என இரு படங்களும் ஒரே நாளில் மோதுமா? என்கிற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. அப்படி நடந்தால் மிகப்பெரிய போட்டியாக அது மாறும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X