இது அஜித்தோட கேஜிஎஃப்.. விஜய்க்கு நெய்வேலி.. திருச்சியில் AK.. மொட்டை மாடியில் கொல மாஸ்!

சென்னை: திருச்சியில் நடைபெற்று வரும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் கலந்து கொள்ளும் தகவல் காட்டுத்தீ போல பரவிய நிலையில், அவரை சந்திக்க அங்கு ஏராளமான ரசிகர்கள் திடீரென திரண்டு விட்டனர்.

வெளிநாட்டு ரசிகர்களுடனே செல்ஃபி எடுத்து சந்தோஷப்படுத்தி வந்த நடிகர் அஜித், இந்த முறை தனது ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

மொட்டை மாடியில் ஏறி நின்று நடிகர் அஜித் கை அசைத்த வீடியோக்கள் தற்போது டிரெண்டாகி வருகின்றன.

இறுதிக்கட்டத்தில் ஏகே61

இறுதிக்கட்டத்தில் ஏகே61

போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி வரும் ஏகே61 திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் புனேவில் ஒரே ஒரு பைக் ஸ்டன்ட் காட்சி மட்டும் படமாக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஹைதரபாத்தில் தான் படப்பிடிப்பு என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாநில அளவிலான போட்டி

மாநில அளவிலான போட்டி

திருச்சியில் உள்ள கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் அஜித் இதில் பங்கேற்றுள்ளார்.

குவிந்த ரசிகர்கள்

குவிந்த ரசிகர்கள்

நடிகர் அஜித் திருச்சியில் நடக்கும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்கிறார் என்கிற தகவல் காட்டுத்தீயாக பரவிய நிலையில், அஜித்தை நேரில் சந்திக்க ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கூடி விட்டனர். ரசிகர்களை கண்ணாடி அறைக்குள் இருந்து கொண்டு நடிகர் அஜித் கையசைத்தும் தம்ப்ஸப் காட்டிய வீடியோக்களும் டிரெண்டாகின.

மாடியில் மாஸாக

கூட்டம் அதிகரித்துக் கொண்டே போன நிலையில், அனைத்து ரசிகர்களுக்கும் காட்சி தர வேண்டும் என நினைத்த நடிகர் அஜித் மொட்டை மாடியின் மீது ஏறி ரசிகர்களை பார்த்து கையசைத்தும் தம்ப்ஸ் அப் செய்த காட்சிகள் தற்போது வேறமாறி டிரெண்டாகி வருகின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு நடிகர் அஜித்தின் செயல்பாடுகளில் அதிக வித்தியாசம் தெரிவதாகவும் ரசிகர்கல் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

நெய்வேலியில் விஜய்

நெய்வேலியில் விஜய்

மாஸ்டர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போது நெய்வேலியில் இருந்து பஸ் மீது ஏறிய படி நடிகர் விஜய் செல்ஃபி எடுத்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெறித்தனமாக டிரெண்டாகின. நடிகர் விஜய்யின் கேஜிஎஃப் இது என ரசிகர்கள் சொல்லி வந்த நிலையில், தற்போது அஜித்தின் வீடியோக்களை ஷேர் செய்து இது அஜித்தின் கேஜிஎஃப் என ரசிகர்கள் ட்வீட் போட்டு தெறிக்கவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X