Ajith: காலில் விழுந்த அஜித்.. மனுஷன் எப்படிங்க இப்படி இருக்காரு? விமான நிலையத்தில் என்ன நடந்துச்சு?
சென்னை: நடிகர் அஜித் குமார் தற்போது கார் ரேஸில் செம பிஸியாக உள்ளார். அவரது அடுத்த படத்திற்கான வேலைகளும் ஒரு பக்கம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. அவரது நடிப்பில் வெளியான அட்டகாசம் படம் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இப்படி இருக்கும்போது அஜித்தின் ஒரு செயல் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாக மாறியது. இது மட்டும் இல்லாமல், படம் வணிக ரீதியாகவும் பெறும் வெற்றி பெற்றது. இதையடுத்து அஜித் நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இது மட்டும் இல்லாமல், அஜித் தனது 64 வது படத்திற்கு அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம், அஜித்தின் 64 வது படத்தின் வேலைகள் முடிந்து, கார் ரேஸ் கமிட்மெண்ட்கள் முடிந்த பின்னர் படத்தை தொடங்கலாம் என்று அஜித் கூறியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் தனுஷ் அஜித்திற்கு கதை ஒன்று வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அஜித் ரேஸிங்: இப்படி இருக்கும்போது, அஜித் தற்போது தனது கார் ரேஸ் பந்தயங்களில் கவனமாக இருக்கிறார். வரும் ஜனவரி மாதத்தில் ஏசியன் லீ மேன்ஸ் சாம்பியன் சீரிஸ் நடைபெறவுள்ளது. அதில் நடிகரும் ரேஸரான அஜித், இந்தியாவின் புகழ்பெற்ற கார் ரேஸரான நரைன் கார்த்திகேயனுடன் கலந்து கொள்ளவுள்ளார். அதற்கும் அஜித் தீவிரமாக தயாராகி வருகிறார். இப்படி இருக்கும்போது நடிகர் அஜித்குமார் விமான நிலையத்தில் வயதானவர் ஒருவரின் காலில் விழும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அஜித் வீடியோ: அதாவது அஜித் அந்த வீடியோவில், " விமான நிலையத்தில் இருந்து வெளியே தனது ட்ராலியை தள்ளிக் கொண்டு வருகிறார். அப்போது அங்கு வீல் சேரில் இருக்கும் வயதான ஒருவரை பார்த்த அவர், உடனே அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு வெளியே வருகிறார். மேலும் வெளியே பணிக்கு நின்று கொண்டு இருந்த ஊழியர்களுக்கும் கை கொடுக்கிறார்". இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த பலரும் அஜித் எப்படி இந்த அளவுக்கு எளிமையாக இருக்கிறார் என்ற கேள்வியை ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள். இந்த வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











