AK 62: விஜய்க்கு சொன்ன கதை இல்லையாம்.. ஆர்யாவுக்கு சொன்ன கதையில் தான் நடிக்கப் போறாரா அஜித் குமார்?

சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்க உள்ள ஏகே 62வது திரைப்படத்தின் கதை முன்னதாக ஆர்யாவுக்கு சொன்ன கதை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

போனி கபூர் தயாரிப்பில் தொடர்ந்து 3 படங்களில் நடித்து வந்த நடிகர் அஜித், அடுத்ததாக லைகா தயாரிப்பில் ஏகே 62 படத்தில் நடிக்க உள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் அந்த படத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில், மகிழ் திருமேனி தான் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2வது வாரமே ஆகிடுச்சு

2வது வாரமே ஆகிடுச்சு

பிப்ரவரி முதல் வாரத்தில் லியோ படத்தின் அப்டேட் வெளியாகி அந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், அஜித்தின் ஏகே 62 படத்தின் அறிவிப்பு மார்ச் 2வது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் படத்தில் நடிக்க நடிகர்கள் செட் ஆகாமல் படப்பிடிப்பு தொடங்குவதே தள்ளிப் போய்க் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

மகிழ் திருமேனி இயக்கத்தில்

மகிழ் திருமேனி இயக்கத்தில்

2010ம் ஆண்டு வெளியான முன் தினம் பார்த்தேனே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மகிழ் திருமேனி. அதன் பிறகு தடையற தாக்க படத்தை அருண் விஜய்யை வைத்து இயக்கினார். 2014ம் ஆண்டு ஆர்யா, ஹன்சிகா நடிப்பில் மீகாமன் படம் வெளியானது. 2019ல் மீண்டும் அருண் விஜய்யை வைத்து தடம் படத்தை கொடுத்தார். கடந்த ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடித்த கலகத் தலைவன் படத்தை இயக்கி உள்ள மகிழ் திருமேனி அடுத்ததாக அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்க உள்ளார்.

ஒரு படம் தான் ஓடிச்சு

ஒரு படம் தான் ஓடிச்சு

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் இதுவரை 5 படங்கள் வெளியான நிலையில், அருண் விஜய் டபுள் ஆக்‌ஷனில் நடித்த தடம் படம் மட்டுமே ஹிட் அடித்தது. மற்ற அனைத்து படங்களும் படு சொதப்பலாக மாறிய நிலையில், விக்னேஷ் சிவனை விட அஜித்தின் படத்தை மகிழ் திருமேனி சிறப்பாக இயக்குவார் என லைகா தரப்பு மகிழ் திருமேனியை டிக் அடித்திருக்கிறது.

விஜய்க்கு சொன்ன கதை

விஜய்க்கு சொன்ன கதை

தடம் படம் ஹிட் அடித்ததுமே நடிகர் விஜய்க்கு மகிழ் திருமேனி ஒரு கதை சொல்லி இருந்தார். அந்த கதை பிடித்துப் போனதாகவும் விரைவில் படம் பண்ணுவோம் என விஜய் சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், விஜய் - மகிழ் திருமேனி காம்போ இணைவதற்குள் அஜித் - மகிழ் திருமேனி கூட்டணி இணைந்துள்ளது.

அந்த கதை தானா

அந்த கதை தானா

உடனடியாக விஜய்க்கு சொன்ன கதையில் தான் அஜித் நடிக்கப் போகிறாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. விஜய்க்கு சொன்ன கதையையும் அஜித்துக்கு மகிழ் திருமேனி சொல்லி இருக்கிறாராம். ஆனால், ஏகே 62 படத்தின் கதை விஜய்க்கு சொன்ன கதை இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

 ஆர்யாவுக்கு சொன்ன கதை

ஆர்யாவுக்கு சொன்ன கதை

மீகாமன் படத்திற்கு பிறகு மீண்டும் ஆர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க மகிழ் திருமேனி உருவாக்கி வைத்திருந்த கதையில் தான் தற்போது அஜித் நடிக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால், இது குறித்தோ அஜித் 62 படத்தை இயக்கப் போவது குறித்தோ மகிழ் திருமேனி இன்னமும் வாய் திறக்கவே இல்லை.

வில்லன் இவரா

வில்லன் இவரா

அருண் விஜய் அஜித்துக்கு வில்லனாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வணங்கான் படத்திற்காக அருண் விஜய் பிசியாகி விட்டாராம். இந்நிலையில், ஆர்யாவை வில்லனாக போடலாமா என்கிற ஆலோசனையில் மகிழ் திருமேனி இருப்பதாகவும் கூறுகின்றனர். ஆர்யாவுக்காக உருவாக்கப்பட்ட கதையில் ஆர்யாவே வில்லனாக நடிக்க வேண்டிய சூழல் உருவாகி விட்டதே என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X