டாப் 5 சினிமா செய்திகள்.. அஜித் வாங்கிய விருது முதல் ஆர்யன் பட ஓடிடி ரிலீஸ் வரை

சென்னை: நடிகர் அஜித்குமாருக்கு இத்தாலி நாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் Gentleman Driver of the year 2025 விருது இன்று வழங்கப்பட்டது முதல் விஷ்ணு விஷால் நடித்த ஆர்யன் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு வரை என கோலிவுட்டில் இன்று நடந்த டாப் 5 செய்திகளை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகர் அஜித்குமார் இப்போது சினிமா மட்டுமின்றி கார் ரேஸிலும் தீவிர கவனம் செலுத்திவருவது அனைவரும் அறிந்தது. தனது ரேஸிங் டீமுடன் வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வென்றுவரும் அவருக்கு இத்தாலி நாட்டில் SRO மோட்டார் குழுமம் சார்பில் Gentleman Driver of the year 2025 என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அவர் இன்று பெற்றுக்கொண்டார். மேலும் இவ்விழாவில் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார்.

ஆர்யன் ஓடிடி ரிலீஸ்: விஷ்ணு விஷால் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான ஆர்யன் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. சூழல் இப்படி இருக்க அப்படமானது நவம்பர் 28ஆம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

Ajith Kumar Wins Gentleman Driver of the Year 2025 Award in Italy Kollywood Top 5 News
Photo Credit:

இணையத்தை கலக்கும் ஃபோட்டோஸ்: கோலிவுட் டாப் ஸ்டார்கள் எல்லாம் ஒன்றாக டீ கடைக்கு சென்றால் எப்படி இருக்கும் என்ற ஏஐ புகைப்படம் நேற்று ட்ரெண்டான நிலையில்; இன்று அதேபோல் இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசாகர், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் ஆகியோரை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ஏஐ புகைப்படங்களும் ட்ரெண்டாகியிருக்கின்றன.

தனுஷ் முகம் பற்றி கமெண்ட்: தனுஷ் நடித்திருக்கும் தேரே இஷ்க் மெய்ன் திரைப்படம் சில நாட்களில் ரிலீஸாகவிருக்கிறது. எனவே படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. அந்தவகையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "இப்படிப்பட்ட கேரக்டரில் நடிப்பதற்கு எதற்காக என்னை அழைக்கிறீர்கள் என்று இயக்குநரின் கேட்டேன். அதற்கு அவரோ உனக்கு தான் லவ் ஃபெயிலியர் முகம் சரியாக இருக்கிறது என சொன்னார். அன்று நான் வீட்டுக்கு போன பிறகு கண்ணாடியில் எனது முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தேன். அவர் அன்று கிண்டலாக சொன்னாலும் அதனை நான் எனக்கான பாராட்டாகவும் எடுத்துக்கொண்டேன்" என குறிப்பிட்டது கலகலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மாதம்பட்டி ரங்கராஜின் வேலை?: மாதம்பட்டி ரங்கராஜ் தினமும் ஏதாவது ஒன்று சொல்லும் ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ரங்கராஜ் என்னுடைய நம்பரை பலருக்கு கொடுத்து திட்ட வைக்கிறார்" என்று குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இதுவும் பெரிய பேசுபொருளாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X