திடீரென எக்ஸ் தளத்தில் டிரெண்டான த்ரிஷா.. எல்லாத்துக்கும் காரணம் ஹேண்ட்ஸம் அஜித் குமார் தான்!

சென்னை: அஜித் குமாரின் விடாமுயற்சி படத்துக்கான டிக்கெட் புக்கிங் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களிலும் தொடங்கி ஹாட் கேக்காக விற்றுத் தீர்ந்து வருகின்றன. 12 மணிக்கு மேல் தான் சென்னையில் பல திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. 9 மணிக்கு சிறப்புக் காட்சிக்கான அனுமதி இன்னமும் வழங்கப்படவில்லை என்றே தெரிகிறது. விரைவில், 9 மணிக்கு படம் வெளியாகுமா? என்கிற அப்டேட் கிடைத்துவிடும்.

விடாமுயற்சி படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்த மாதமே விடாமுயற்சி மாதம் தான் என அஜித் குமார் ரசிகர்கள் சோஷியல் மீடியாவையே தங்கள் கட்டுப்பாட்டுக்கள் வைத்திருக்கின்றனர். தமிழக வெற்றிக் கழகம் சார்பான நிகழ்ச்சிகள் மூலம் விஜய்யை அவரது கட்சி தொண்டர்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

trisha ajith kumar vidamuyarchi

இதற்கிடையே தற்போது திடீரென நடிகை த்ரிஷாவின் #Trisha ஹாஷ்டேக் எக்ஸ் தளத்தில் டிரெண்டாகி வருகிறது. அதற்கும் முக்கிய காரணம் அஜித் குமார் தான்.

இது த்ரிஷா ஆண்டு: நடிகை த்ரிஷாவிற்கு இந்த ஆண்டு பல பெரிய படங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன. ஜனவரி மாதமே மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான ஐடென்டிட்டி படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளை கொண்டு ஸ்கை மார்ஷல் கதையாக வெளியான அந்த படம் ரசிகர்களை ஓடிடியில் வெளியாகியும் கவர்ந்து வருகிறது. இந்நிலையில், பிப்ரவரி மாதமும் த்ரிஷாவின் படம் வெளியாகிறது. அஜித்துடன் அவர் இணைந்து நடித்துள்ள விடாமுயற்சி வரும் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், மீண்டும் அஜித்துடன் அவர் இணைந்து நடித்த குட் பேட் அக்லி ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்புவுடன் அவர் இணைந்து நடித்துள்ள தக் லைஃப் திரைப்படமும் இந்த ஆண்டு வெளியாகவுள்ள நிலையில், இந்த ஆண்டு த்ரிஷாவுக்கும் அவரது ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் தான்.

trisha ajith kumar vidamuyarchi

திடீரென டிரெண்டான த்ரிஷா: நடிகை த்ரிஷா திடீரென எக்ஸ் தள பக்கத்தில் இன்று காலை முதலே டிரெண்டாக காரணம் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் லேட்டஸ்ட் போட்டோக்கள் வெளியானது தான். இளமை தோற்றத்தில் அஜித் குமார் த்ரிஷாவுடன் இருக்கும் காட்சி டீசரில் ஒரு செகண்ட் வந்து போன நிலையிலேயே ரசிகர்கள் அதை பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அந்த பாடல் காட்சியின் பல புகைப்படங்கள் தற்போது வெளியாகி த்ரிஷாவை டிரெண்டாக்கி விட்டன.

trisha ajith kumar vidamuyarchi

வசூல் வேட்டை கன்ஃபார்ம்: தமிழ்நாட்டில் சோலோ ரிலீஸாக அஜித் குமாரின் விடாமுயற்சி வரும் வியாழனன்று வெளியாகவுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை வரை தியேட்டர்கள் எல்லாம் ஹவுஸ்ஃபுல்லாக மாறி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அஜித் குமார் இந்த படத்துக்காக செய்துள்ள ஸ்டண்ட் காட்சிகளை எல்லாம் படக்குழு மேக்கிங் வீடியோவாக வெளியிட்டு படத்தை ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் புரமோட் செய்து வருகிறது. விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்துக்குப் பிறகு அஜித் குமாரின் படம் அவர் ரேஸ்களில் பங்கேற்று வருவதால் ஆரம்பிக்கவே தாமதமாகும் என்பதால், இந்த முறை அஜித் ரசிகர்கள் தியேட்டர்களை திருவிழாக் கோலமாக மாற்றுவது உறுதி என்கின்றனர். கண்டிப்பாக இந்த முறை பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டு மிஸ்ஸே ஆகாது என்றும் கூறி வருகின்றனர்.

trisha ajith kumar vidamuyarchi

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X