ரேஸ் காரில் காற்றை கிழித்து சீறிப்பாய்ந்த அஜித்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!
சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றிருக்கும் அஜித் நடிப்பில் மட்டுமல்லாமல் பல துறைகளிலும் திறமையாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் இவர் ரேஸ் காரில் அதிவேகமாக சீறிப்பாயும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் தல என்று அழைக்கப்படும் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் ஒரு கார் பிரியர் என்பதைவிட கார் வெறியர் என்று சொன்னால் தான் சரியாக இருக்கும், சினிமாவில் நடிக்கவருவதற்கு முன்பாக பார்முலா ரேஸ் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார் அஜித் குமார். அஜித் ஒரு கார் பிரியர் என்பதால் அவரது படத்திலும் கார் அல்லது பைக் ஓட்டும் மாஸ் காட்சிகள் கண்டிப்பாக இடம்பெற்று விடும்.

நடிகர் அஜித்: நடிகர் அஜித்தை போல வேறு யாராலும் கார் ஓட்ட முடியாது என்று பலர் சொல்லி கேள்வி பட்டு இருக்கிறோம். அந்த அளவிற்கு தல கார் ஓட்டுவதில் கில்லாடி. அஜித் வீட்டின் கராஜில் பல வகையான பைக் மற்றும் கார் நின்றுகொண்டிருக்கும். ஆனால், பெரும்பாலும் அஜித் வெளியில் சென்றால் அவர் சிகப்பு நிற சிப்ட் அல்லது வெள்ளை நிற இன்னோவா காரில் தான் பயணம் செய்வார். அஜித்திற்கு பைக் ரேஸ், கார் ரேஸில் தான் ஆர்வம் அதிகம் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். படப்பிடிப்பு முடிந்தவுடன் பைக்கை எடுத்துக்கொண்டு பைக்கில் டூர் கிளம்பி விடுவார்.
பைக் ரைடு: அவருடைய அனைத்து படத்திலும் ஒரு சீனாவது பைக் ரேஸ் காட்சிகள் நிச்சயம் இடம் பெற்று இருக்கும், சூப்பர் ஹிட்டான துணிவு படத்தில், சூப்பர் ரேஸ் ஸ்டண்ட் காட்சிகள் இருந்தது. அதை தல அஜித்தே செய்திருந்தார். அந்த காட்சியின் அவர் தவறி விழுந்த வீடியோ இணையத்தில் வெளியானது. அதைப்பார்த்த ரசிகர்கள் பதறிப்போனார்கள். ஆனால், அஜித் கூலாக படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் பைக்கை எடுத்துக்கொண்டு ரைடுக்கு சென்றுவிட்டார்.
பைக் பிரியர்: பலமுறை பைக் விபத்துளை சந்தித்து இருக்கிறார் அஜித், அவருக்கு உடம்பில் பல முறை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் அவர் விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜன் செல்ல விமான நிலையம் வந்த போதும், கால் வலியால் தாங்கி தாங்கி நடந்து வந்ததை பார்க்க முடிந்தது. என்னத்தான் ஆனாலும், தனக்கு விருப்பமான பைக் ரைடிங்கை நடிகர் அஜித் விடவே இல்லை.
கார் ரேஸ்: இந்நிலையில் அஜித் அதிவேகமாக கார் ரேஸ் ஓட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில் புயல்போல காற்றை கிழித்துக்கொண்டு சீறிப்பாய்கிறார் அஜித். இந்த வீடியோவை பார்ப்பதற்கு நம் மனம் பதறினாலும், அஜித் அதில் கூலாக அமர்ந்து கொண்டு சீறிப்பாய்கிறார் . இந்த வீடியோவை அஜித்தின் ரசிகர்கள் இணையத்தில் படுவைரலாக்கி வருகின்றனர். பைக் மற்றும் கார் ஓட்டுவதில் கில்லாடியான அஜித் கடந்த 2004 நடைபெற்ற பிரிட்டிஷ் பார்முலா த்ரீ ரேஸ் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











