கரெக்ட்டா ஃபூல்ஸ் டே அன்னைக்கு வந்துருக்கீங்க.. ரசிகரிடம் ரகளை செய்த அஜித்.. வீடியோ டிரெண்டாகுது!
சென்னை: நடிகர் அஜித் குமார் தனது ரசிகர்களிடம் அடிக்கடி இப்படி சேட்டை செய்வது வழக்கம் தான். பைக் டூர் சமயத்தில் 2 நாளா உங்களை வலை வீசி தேடுறோம் என சில ரசிகர்கள் சொன்னதை கேட்டதும் "நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா? எதுக்கு என்னை தேடுறீங்க" என கலாய்த்தார்.
இந்நிலையில், நேற்று அஜித்தை சந்தித்து கையெழுத்து வாங்கிய ரசிகரிடமும் ஜாலியாக ரகளை செய்து விளையாடிய வீடியோ சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி படத்தில் நடித்து வந்த நிலையில், அந்த படத்தின் சூட்டிங் அப்படியே கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது.
ஒரு வருஷம் ஆகப் போகுது: பொன்னியின் செல்வன் படத்தையே மணிரத்னம் 150 நாட்களில் 2 பாகத்தையும் சூட் செய்து முடித்து லைகா நிறுவனத்துக்கு ஒட்டுமொத்தமாக 800 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டும் அளவுக்கு வழிவகை செய்துக் கொடுத்திருந்தார். ஆனால், கடந்த ஆண்டு மே 1ம் தேதி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி என அறிவிக்கப்பட்டு 11 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. அடுத்த மாதத்துடன் 1 வருடம் உருண்டோடி விடும்.
சிக்கலில் விடாமுயற்சி: ஆனால், இன்னமும் அந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது ஆரம்பம் ஆகும் என்றே தெரியாமல் காலதாமதமாகி வருகிறது. தயாரிப்பு தரப்புக்கும் இயக்குநருக்கும் இடையே பிரச்சனையா? அல்லது ஹீரோ மற்றும் இயக்குநரிடையே பிரச்சனையே என்றே தெரியாத அளவுக்கு பிரச்சனை இடியாப்ப சிக்கலாக உள்ளது.
ஏப்ரல் ஃபூல்: இந்நிலையில், நடிகர் அஜித்தை நேற்று சில ரசிகர்கள் சந்தித்த நிலையில், அவரிடம் ஆட்டோகிராஃப் கேட்டிருக்கின்றனர். சரியா ஃபூல்ஸ் டே அன்னைக்கு வந்திருக்கீங்க என அவர்களுடன் ஜாலியாக அஜித் ரகளை செய்த வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாவில் செம டிரெண்டாகி வருகிறது.
குட் பேட் அக்லி: விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கை முடிப்பதற்கு முன்னதாகவே குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பை அஜித் தொடங்கி விடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த படத்தை பொங்கலுக்குள் முடித்து ரிலீஸ் செய்ய வேண்டிய கட்டாயம் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கான வேலைகளை தீயாக பார்த்து வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











