Good Bad Ugly First Review: குட் பேட் அக்லி முதல் விமர்சனம்.. ஸ்ரீதர் என்ன இப்படி சொல்லிட்டாரு!
சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வருகிறது. அந்த படத்துக்கு போட்டியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட தனுஷின் இட்லி கடை படமும் பின்வாங்கி விட்டது.
தமிழ்நாடு முழுவதும் சோலோ ரிலீஸ் ஆக 850 திரையரங்குகளுக்கு மேல் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்பா 2 படத்துக்குப் பிறகு மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் பிரமாண்டமாக புரமோட் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.

இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தின் விமர்சனம் குறித்து திருச்சி ஸ்ரீதர் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. குட் பேட் அக்லி படத்தின் முதல் விமர்சனம் ஆகவே இது கருதப்படுகிறது.
விடாமுயற்சி தோல்வி: அஜித் குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வெளியான விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி வெளியான நிலையில், பாக்ஸ் ஆபிஸில் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்திடமே அடி வாங்கியது. நடிகர் அஜித்குமார் வாங்கிய சம்பளம் அளவுக்கு கூட படத்தின் வசூல் இல்லை என்றும் ட்ரோல்கள் பறந்தன. ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தை உரிய உரிமம் கூட வாங்காமல் எடுத்து கடைசி நேரத்தில் சிக்கலில் சிக்கி பொங்கலுக்கு ரிலீசாக முடியாமல் தாமதமான நிலையில், அஜித் ரசிகர்களை கூட அந்த படம் திருப்திப்படுத்த முடியாமல் போனதுதான் சங்கடத்தை ஏற்படுத்தியது.
குட் பேட் அக்லி முதல் விமர்சனம்: மலேசியாவில் சமீபத்தில் நண்பர் குட் பேட் அக்னி படத்தின் சென்சார் காட்சியை பார்த்தார். அந்த படம் அஜித் குமார் நடித்த வெளியான சிட்டிசன், தீனா, பில்லா, மங்காத்தா உள்ளிட்ட படங்களின் கலவையாக இருப்பதாகவும் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் திருப்திப்படுத்தும் என்றும் படம் வெளியானால் பாக்ஸ் ஆபிஸ் வேட்டை உறுதி என்றும் திருச்சி ஸ்ரீதர் கூறியுள்ளார்.
500 கோடி கன்ஃபார்ம்: அஜித் குமார் தோல்விப் படங்களை கொடுக்க கூடாது என்றும் அவர் வெற்றிப் படங்களை கொடுக்க வேண்டும் என்பது தான் தனது தனிப்பட்ட விருப்பம் என்றும் திருச்சி ஸ்ரீதர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் இறங்கி அடித்திருக்கும் நிலையில், இந்த படம் கண்டிப்பாக 500 கோடி வரை பாக்ஸ் ஆபீஸ் வேட்டை நடத்தும் என சினிமா வட்டாரத்தில் அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
துணிவு வசூல்: அஜித் குமார் நடித்த படங்களில் இதுவரை அதிகபட்சமாக துணிவு திரைப்படம் மட்டுமே 200 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறுகின்றனர். விடாமுயற்சி திரைப்படம் 130 கோடிக்கும் குறைவாகத்தான் வசூல் வந்திருக்கும் என்கின்றனர். லைகா நிறுவனம் ரஜினிகாந்த், அஜித் குமார், கமல்ஹாசன் என பல முன்னணி நடிகர்களை நம்பி பணம் போட்டு படமெடுத்தும் அந்த நிறுவனத்துக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிச்சயம் பெத்த லாபம் அள்ளும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











