அல்லு அர்ஜுனால் அஜித் படத்துக்கு ஆபத்தா?.. தடுமாறும் தயாரிப்பு நிறுவனம்.. குட் பேட் அக்லி என்னாகும்?

சென்னை: 'புஷ்பா' மற்றும் 'புஷ்பா 2' படங்களை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம் தான் அஜித்தின் 'குட் பேட் அக்லி'. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் பிரம்மாண்டமாக அந்த படம் உருவாகி வருகிறது.

100 கோடிக்கு மேல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சம்பளம் கேட்டு வரும் நிலையில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் பலர் அதிக பட்ஜெட் காரணமாக ஏகப்பட்ட இழப்புகளை சந்தித்து வரும் நிலையில், பெரிய நடிகர்களை வைத்து படம் தயாரிக்கும் முடிவை கைவிட்டுள்ளனர்.

Ajith Kumar Good Bad Ugly Pushpa 2 Allu Arjun Vidamuyarchi 2

தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள முடியாது என்கிற முடிவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் தங்களுக்கான சம்பளத்தை கொடுக்கும் தயாரிப்பாளர்களை தேடி பக்கத்து மாநிலங்களுக்கு படையெடுக்கும் நிலைமை தற்போது உருவாகியுள்ளது.

165 கோடி சம்பளம்?: லைகா நிறுவனம் விடாமுயற்சி படத்திற்காக அஜித்துக்கு முதன் முறையாக 105 கோடி சம்பளம் பேசியதாக தகவல்கள் வெளியாகின. விடாமுயற்சி திரைப்படம் விரைவில் முழு படப்பிடிப்பையும் முடித்து விடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜூன் 20ம் தேதி அதற்காக அஜித் அஜர்பைஜான் செல்லப் போவதாக கூறுகின்றனர். அதனைத் தொடர்ந்து அஜித்குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் அந்த படத்துக்கு அஜித்குமாரின் சம்பளம் மட்டும் 165 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளன.

புஷ்பா 2 ரிலீஸ் தள்ளி வைப்பு: சுமார் 3 ஆண்டுகளாக புஷ்பா 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸ் டிசம்பர் 6 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் இன்னமும் நிறைவடையவில்லை என்றும் சில பேட்ச் வொர்க் இருப்பதால் மேலும் சில மாதங்கள் காலதாமதம் ஆவதாக படக்குழு அறிவித்துள்ளது. ஆனால், விநியோகஸ்தர்கள் அந்த படத்தை வாங்க முன் வரவில்லை என கடந்த சில வாரங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தது. மேலும், புஷ்பா 2 தள்ளிப்போகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அதே போல் தற்போது தயாரிப்பு நிறுவனமும் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் படத்துக்கு சிக்கல்?: புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தாண்டு பொங்கலுக்கு 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த படத்தின் ரிலீஸ் தேதி தாமதம் ஆகுமா என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் நடிகர் அஜித் பங்கேற்று வரும் நிலையில், விடாமுயற்சி படம் தான் பொங்கலுக்கு வரும் என்றும் குட் பேட் அக்லி அடுத்த ஆண்டு சம்மருக்கு தான் வெளியாகும் என்றும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. பெரிய பட்ஜெட் படங்களை எடுப்பதும் அதை ரிலீஸ் செய்வதும் அவ்வளவு எளிதான காரியம் இல்லை என தயாரிப்பு நிறுவனங்கள் புரிந்து கொண்டன. பல நூறு கோடி பட்ஜெட்டில் படங்கள் உருவாகும் நிலையில், இதுபோன்ற கால தாமதங்களை தவிர்க்க முடியாது எனக் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X