தேவி ஸ்ரீ பிரசாத்தால் குட் பேட் அக்லி படத்துக்கு இப்படியொரு சிக்கலா?.. அப்போ பொங்கல் செலிபிரேஷன்?
சென்னை: லைகா மற்றும் அஜித் இடையே இன்னமும் இழுபறி நீடித்துக் கொண்டிருப்பதாகவும் அதன் காரணமாக பொங்கலுக்குக் கூட விடாமுயற்சி ரிலீஸ் ஆகாது என தகவல்கள் வெளியாகின. உடனடியாக உள்ளே புகுந்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் பொங்கலுக்கு குட் பேட் அக்லி படத்தை ரிலீஸ் செய்து விட வேண்டும் என்பதில் முழு மூச்சாக செயல்பட்டனர்.
ஆதிக் ரவிச்சந்திரன் அதெல்லாம் எனக்கு அசால்ட்டு மேட்டர் என படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய அனைத்து வேலைகளையும் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கடைசி நேரத்தில் தற்போது குட் பேட் அக்லி படமும் பொங்கலுக்கு வர வாய்ப்பே இல்லை என சினிமா வட்டாரத்தில் திடுக்கிடும் பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.

அதற்கு முக்கிய காரணமே நம்ம கங்குவா படத்தை கத்தியே காலி செய்த புஷ்பா 2 இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தான் என்கிற குற்றச்சாட்டையும் அடுக்கியுள்ளனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் தேவையில்லை: அஜித் குமாரின் ஆஸ்த்தான இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவையே கடைசி நேரத்தில் வலிமை படத்தில் ஒதுக்கி வைத்து விட்டு ஜிப்ரானை அழைத்து வந்து இசையமைக்க செய்தார் அஜித் குமார். இந்நிலையில், அதே நிலைமை தான் குட் பேட் அக்லி படத்துக்கும் நடந்திருப்பதாக கூறுகின்றனர். கங்குவா படத்தின் தோல்வி எதிரொலி காரணமாக அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தின் பின்னணி இசையை சரி செய்ய தமன் மற்றும் சாம் சிஎஸ் என இரு இசையமைப்பாளர்களை அணுகியுள்ளார். இந்நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் பற்றி மேடையிலேயே புலம்பித் தள்ளிய தேவி ஸ்ரீ பிரசாத்தை குட் பேட் அக்லி படத்துக்கு மியூசிக் போடவே தேவையில்லை என்கிற முடிவை எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
பொங்கல் ரிலீஸ் சந்தேகம் தான்: தேவி ஸ்ரீ பிரசாத்தை குட் பேட் அக்லி படத்தில் இருந்து நீக்கும் பட்சத்தில் திட்டமிட்டபடி பொங்கலுக்குள் குட் பேட் அக்லி படத்துக்கு தரமான இசையை இசையமைப்பாளர்கள் கொடுக்க முடியாது என்றும் டைம் எடுக்கும் என்பதால் பொங்கலுக்கு குட் பேட் அக்லி படமும் வெளியாக வாய்ப்பில்லை என தற்போது பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன.
கேம் சேஞ்சர் மோதல் தவிர்ப்பு?: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்துடனான மோதலும் இதன் காரணமாக தவிர்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழில் சியான் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் மற்றும் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படங்களுக்கு பெரிதாக பாதிப்பு வராது என்றும் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தாமதமானால் மற்ற படங்களுக்கு கொண்டாட்டம் தான் என்றும் கூறுகின்றனர்.
அஜித் ரசிகர்கள் பாவம்: இந்த ஆண்டு மே மாதம் தொடங்கி தீபாவளி வரை அஜித்தின் விடாமுயற்சி படம் வந்துவிடும் என காத்திருந்த ரசிகர்களுக்கு அடுத்த ஆண்டு பொங்கலுக்கு கூட குட் பேட் அக்லி வராது என்பது தெரிந்தால் நிச்சயம் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். ஆனால், படம் எப்போது வந்தாலும் தரமான சம்பவமாக இருக்கும் என்பதால் கொஞ்சம் வெயிட் பண்ணித்தான் ஆகவேண்டும் என்றும் மனதை தேற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











