Ajith Kumar: குட்டி தல லுக்கே அப்படின்னா.. தல தரிசனம் இல்லாமலா.. குட் பேட் அக்லி கொல மாஸ் லுக்!

சென்னை: ஸ்டேடியத்தில் அம்மா ஷாலினியுடன் குட்டி தல ஆத்விக் இருக்கும் புகைப்படம் இன்று காலை வெளியாகி டிரெண்டான நிலையில், தற்போது அஜித் ரசிகர்களுக்கு தல தரிசனமே கிடைத்துள்ளது. விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என அடுத்தடுத்து அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் ஸ்பாடிட்ல் அஜித் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் லுக்கை விட ஆஃப் ஸ்க்ரீன் லுக்கில் அஜித் குமார் மரண மாஸாக இருக்காரே என ரசிகர்கள் தற்போது #GoodBadUgly ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து தெறிக்கவிடுகின்றனர்.

ajith kumar good bad ugly vidamuyarchi

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தொடர்பான அப்டேட்கள் வருகிறதோ இல்லையோ விரைவில் குட் பேட் அக்லி படம் தொடர்பான அப்டேட்களை மைத்ரி மூவி மேக்கர்ஸ் அடுக்கிவிடும் என தெரிகிறது.

தல டக்கர்டோய்: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா நடிப்பில் குட் பேட் அக்லி படம் உருவாகி வருகிறது. வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் குட் பேட் அக்லி படம் வெளியாக உள்ள நிலையில், விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களிலும் பிசியாக அனைத்து வேலைகளையும் அஜித் பார்த்து வருகிறார். இந்நிலையில், குட் பேட் அக்லி பட லுக்கில் தல டக்கராக கொடுத்த போஸ் புகைப்படம் இணையத்தில் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

டபுள் ட்ரீட்: வேட்டையன் படம் ரிலீஸ் ஆனவுடனே அஜித்தின் விடாமுயற்சி படத்தை வெளியிடும் பணிகளை லைகா நிறுவனம் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கலுக்கு குட் பேட் அக்லி வருவது உறுதியான நிலையில், டிசம்பர் மாதம் விடாமுயற்சி வெளியாகுமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. அல்லது ஜனவரி 26ம் தேதி விடாமுயற்சி வெளியானாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கின்றனர்.

ajith kumar good bad ugly vidamuyarchi

தரமான சம்பவம்: மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு ரசிகர்கள் பல்ஸை பிடித்துள்ள இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் குமாரை வைத்து தரமான சம்பவத்தை குட் பேட் அக்லி படத்தில் செய்து வருகிறார் என்றே தெரிகிறது. மார்க்கோ போலோ டீசர்ட் அணிந்துக் கொண்டு அஜித் கொடுத்துள்ள ஃபிரெஞ்ச் பியர்ட் மற்றும் டாட்டூக்கள் உடம்பில் குத்தியபடி இருக்கும் ஸ்டில் வேறலெவலில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X