இந்த முறை 9 இல்லை.. 10 சென்டிமென்ட்டில் வெறித்தனம் காட்டும் அஜித்.. குட் பேட் அக்லி குட் நியூஸ்!

சென்னை: நடிகர் அஜித் குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை என்றாலும், இந்த ஆண்டு இதுவரை கோலிவுட்டில் வெளியான படங்களிலேயே 100 கோடி வசூலை கடந்த ஒரே படமாக அந்த படம் தான் உள்ளது. பெரிய பட்ஜெட்டில் எடுத்த அந்த படம் பாக்ஸ் ஆபீஸில் பந்தயம் அடிக்காத நிலையில், சேர்த்து வைத்து பைசா வசூலை அள்ள ஏப்ரல் 10ம் தேதியே அஜித் குமாரின் குட் பேட் அக்லி ரிலீஸாக காத்துக் கொண்டிருக்கிறது.

மே 1ம் தேதி தள்ளிப்போகும் பேச்சுக்கெல்லாம் இடமில்லை என்றும் தனுஷின் இட்லி கடை மட்டுமில்லை வேற எந்த படம் வெளியானாலும் குட் பேட் அக்லி தான் பாக்ஸ் ஆபீஸ் வேட்டை நடத்தும் என அஜித் ரசிகர்கள் தங்களின் கடைசி நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Ajith Kumar Good Bad Ugly Trisha

சமீப காலமாக சில முன்னணி நடிகர்கள் படங்கள் எல்லாம் கூட்டுத்தொகை 9 வரும்படி அப்டேட்களை வெளியிட்டு வரும் நிலையில், ரிலீஸ் தேதியை போல இன்று மாலை கூட்டினால் 10 வரும் என வரும்படி இன்று மாலை ஒரு தரமான குட் பேட் அக்லி வெளியாக காத்திருக்கிறது.

பாவம் அஜித் ரசிகர்கள்: அஜித் குமாரின் படம் வருவதற்காக பல வருடங்கள் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், படம் வெளியானதும் அவர்களை திருப்திப்படுத்தும் விதமாக கடந்த சில ஆண்டுகளாகவே எந்தவொரு படமும் வெளியாகாமல் இருப்பது ரசிகர்களை ரொம்பவே பாதிக்க வைத்துள்ளது. ஆனால், இந்த முறை ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் ரசிகர்களை ஏமாற்றமாட்டார் என்றே தெரிகிறது.

Ajith Kumar Good Bad Ugly Trisha

குட் பேட் அக்லி அப்டேட் ஆன் தி வே: இன்று மாலை 7:03 மணிக்கு அஜித் குமார், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் பிப்ரவரி 28ம் தேதி குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகவுள்ள நிலையில், புதிய போஸ்டருடன் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சின்ன க்ளிம்ப்ஸ் போல வெளியானால் அஜித் ரசிகர்கள் ரொம்பவே ஹேப்பியாவோம் என கோரிக்கை வைத்து வருகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் புஷ்பா 2வுக்கு புரமோஷன் செய்ததை போல இந்த படத்துக்கும் செய்தால் படம் வெயிட்டு காட்டும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X