அந்த பயம் வந்துடுச்சா?.. அஜித்தின் குட் பேட் அக்லி ரிலீஸ் தள்ளி போகிறதா?.. அப்போ சூர்யாவோட ரெட்ரோ?
சென்னை: விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துவிட்டு கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸ் பிப்ரவரி 6ம் தேதி தள்ளிப்போனது. விடுமுறை தினத்தில் வெளியாகாமல் வியாழக்கிழமை மற்றும் 'வி' டைட்டில் சென்டிமென்ட்டை நம்பி அஜித் குமார் அந்த படத்தை வெளியிட அனுமதித்த நிலையில், விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி வசூலில் பெரிதாக ஸ்கோர் செய்ய முடியாமல் தவித்து வருகிறது.
ஒட்டுமொத்தமாகவே அந்த படம் உலகளவில் 150 கோடி வசூலை கூட இன்னமும் கடக்கவில்லை என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லைகா நிறுவனம் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் அறிவிப்பை கூட கெத்தாக போஸ்டர் வெளியிட்டு சொல்லி ரசிகர்களை தியேட்டர்களை நோக்கி வரவழைக்கும் புரமோஷன் யுக்தியையும் இந்த முறை செய்யவில்லை.

அஜித் ரசிகர்களின் அடுத்த பெரும் நம்பிக்கையே குட் பேட் அக்லி படம் மட்டும் தான். ஃபைட் மாஸ்டரும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும் தான் அந்த படத்திற்கு பில்டப் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், இட்லி கடையுடன் குட் பேட் அக்லி மோதாது என்கிற அதிர்ச்சி தகவல்கள் கோடம்பாக்கத்தில் கசிந்து அஜித் ரசிகர்களை மீண்டும் அதிருப்தியடைய செய்துள்ளது.
குட் பேட் அக்லி ரிலீஸ் தேதியில் மாற்றம்?: ஏப்ரல் 10ம் தேதி அஜித் குமாரின் குட் பேட் அக்லி வெளியாகும் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது. முன்னதாக பொங்கலுக்கு வரும் என அறிவித்திருந்தது. விடாமுயற்சி படம் பண்ண குளறுபடி காரணமாக பொங்கல் ரிலீஸ் மிஸ்ஸாகி ஏப்ரல் 10க்கு படம் வரும் என அறிவித்துள்ளனர். இந்நிலையில், மே 1ம் தேதி படத்தை தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தாக வெளியிடலாம் என்றும் பெரிய வசூல் வேட்டையை நடத்தலாம் என்றும் அஜித் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சூர்யாவின் ரெட்ரோவுக்கு சிக்கல்?: மே 1ம் தேதி அஜித் குமாரின் குட் பேட் அக்லி வரவில்லை என்றதுமே அந்த தேதியை சூர்யா தன்னுடைய ரெட்ரோ படத்துக்காக லாக் செய்து வைத்திருக்கிறார். ஆனால், திடீரென அஜித் குமார் மே 1ம் தேதி குட் பேட் அக்லி படத்தை வெளியிட முடிவு செய்தால் அது நிச்சயம் சூர்யாவின் ரெட்ரோ படத்தின் பாக்ஸ் ஆபீஸுக்கு பங்கம் விளைவிக்கும் என்கின்றனர். கூடிய சீக்கிரமே இந்த ரிலீஸ் தேதி சிக்கல்கள் எல்லாம் சரியாகி அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











