அட இது நல்லா இருக்கே.. கோட் படத்தில் அஜித்தை டீ ஏஜிங் பண்ணியிருந்தா எப்படி இருக்கும்?

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கோட் திரைப்படம் அடுத்த மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஐமேக்ஸ் உள்ளிட்ட ஃபார்மேட்டில் அந்த படம் வெளியாக உள்ளதாக அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்தியன் 2 ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டு ரசிகர்களுக்கு மோசமான அனுபவத்தை கொடுத்த நிலையில், கோட் படத்தின் ஐமேக்ஸ் அறிவிப்பு போஸ்டரும் நல்லா இல்லை என்றும் வயதான கெட்டப் போட்ட வாலிபர் போலவே விஜய் இருப்பதாகவும் அதற்கு மேலே தொங்கிக் கொண்டு விஜய் அந்தரத்தில் பறக்கும் காட்சியை எல்லாம் பார்க்கும் போது லைட்டா பயம் வருது என்றே கலாய்த்து வருகின்றனர்.

GOAT Ajith Kumar Vijay


தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என வெங்கட் பிரபு படத்துக்கு தாறுமாறாக பெயர் வைத்து படத்தை ஆரம்பித்த நிலையில், படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களே வெறுக்கும் அளவுக்குத் தான் உள்ளதாக கூறுகின்றனர்.

அஜித்தோட ஆளு: வெங்கட் பிரபு மங்கத்தாவை இயக்கிய நிலையில், அவர் அஜித்தோட ஆள் தான் என விஜய் ரசிகர்கள் வெங்கட் பிரபுவுக்கு எதிராக கிளம்பி விட்டனர். கோட் திரைப்படத்தின் 3 பாடல்கள் வெளியாகி இதுவரை எந்தவொரு ஹைப்பையும் அந்த படத்திற்கு கொடுக்கவே இல்லாத நிலையில், யுவன் சங்கர் ராஜாவும் அஜித்தின் ஆள் தான் என ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஏஐ சொதப்பல்: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான இந்தியன் 2 படத்திலேயே விவேக், நெடுமுடி வேணு உள்ளிட்டோருக்கு ஏஐ பண்ணதே சொதப்பி விட்ட நிலையில், கோட் படத்தில் யங் விஜய்க்கு ஏஐ மூலம் உருவம் கொடுத்திருப்பது 3வது சிங்கிளில் படுமோசமாக இருப்பதாக விஜய் ரசிகர்களே அந்த பாடலுக்கு எதிராக ஏகப்பட்ட போஸ்ட்டுகளை வெளியிட்டு விஜய் லுக்கையும் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

அஜித் அசத்துறாரே: அதே லுக்கில் நடிகர் அஜித்தை வைத்து எடிட் செய்த ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் தற்போது அந்த போட்டோவை ஷேர் செய்து டிரெண்டாக்கி வருகின்றனர். விஜய் லுக்கை விட அஜித்தின் இந்த லுக் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். கோட் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறுமா? இன்னமும் டீசரை கூட விடாமல் வெங்கட் பிரபு எஸ்கேப் ஆகி வரக் காரணமே படத்தின் மீது அதிகளவில் நெகட்டிவிட்டி பரவி விட்டால் என்ன ஆகும் என்கிற அச்சம் தான் காரணம் எனக் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X