அய்யோ கடவுளே.. வீடியோவை பார்த்தாலே பதறுதே.. விபத்தில் சிக்கிய அஜித்தின் கார்.. ரேஸில் பங்கேற்பாரா?

சென்னை: நடிகர் அஜித் குமார் துபாயில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் கலந்துக் கொள்வதற்காக சென்றுள்ள நிலையில், ரேஸ் டிராக்கில் பயிற்சியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்து வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அஜித் ஒட்டிச் சென்ற கார் அப்பளம் போல நொறுங்கியதை கண்டு அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் பதறிய நிலையில், நல்லவேளையாக அவருக்கு சிறு காயம் கூட ஏற்படாமல் நலமுடன் உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ajith kumar ajith kumar car race ajith kumar car accident

நடிகர் அஜித் குமார் விபத்தில் சிக்கிய வீடியோவை பார்த்த ரசிகர்கள் தயவு செய்து ரிஸ்க் எடுக்க வேண்டாம் அஜித் சார் நீங்கள் ரெஸ்ட் எடுத்தாலே போதும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அஜித்தை திட்டிய ரசிகர்கள்: இந்த பொங்கலுக்கு அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியாகாது என்றும் தேதி குறிப்பிடாமல் தள்ளிப் போவதாகவும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நள்ளிரவில் சுரேஷ் சந்திரா வெளியிட்ட அறிவிப்பு அஜித் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. நீங்க சொன்னதை எல்லாம் கேட்டோம். ஆனால், எங்களுக்காக சொன்ன தேதியில் படம் வரவில்லையே என லைகாவையும் அஜித்தையும் ரசிகர்கள் திட்டித் தீர்த்தனர்.

கார் ரேஸில் பிஸி: இந்த பொங்கலுக்கு அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் வெளியாகாத நிலையில், துபாயில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்க நடிகர் அஜித் நேற்று விமான நிலையத்துக்கு சென்ற காட்சிகளும் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வழியனுப்பிய காட்சிகளும் வெளியாகின. மேலும், கார் பந்தயம் நடக்கும் இடத்தில் அஜித் குமார் கால் வைத்து நகர்த்திச் செல்லும் வண்டியுடன் போஸ் கொடுத்த காட்சிகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி: மேலும், தமிழ் புத்தாண்டுக்கு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்பதை ரிலீஸ் தேதியுடன் அறிவித்து அஜித் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளனர். ஒரு பக்கம் அஜித் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வந்த நிலையில், திடீரென இப்படியொரு விபத்து வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்: விடாமுயற்சி படத்திற்காக அஜித் கார் ஓட்டும் போது விபத்து ஏற்பட்ட வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியது. இந்நிலையில், தற்போது துபாயில் இருந்து அஜித் ஓட்டிச் சென்ற கார் தடுப்புச் சுவற்றில் மோதி விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அஜித்துக்கு ஒன்றுமில்லை: நல்லவேளையாக நடிகர் அஜித் குமார் காயங்கள் ஏதுமின்றி காரில் இருந்து இறங்கி வெளியேறி விட்டார் என்றும் கார் பந்தயத்தில் இதெல்லாம் சகஜம் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தாலும், ரசிகர்கள் அஜித் சார் நீங்க ரிஸ்க் எடுக்க வேண்டாம். எங்களுக்கு நீங்க வேண்டும். கார் பந்தயத்தில் பங்கேற்க வேண்டாம் என அன்பு கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அஜித் குமார் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டார் என்றும் கண்டிப்பாக 10ம் தேதி தொடங்கும் கார் பந்தயத்தில் பங்கேற்பார் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X