vidaamuyarchi box office: அஜித்தின் விடாமுயற்சி.. இரண்டாம் நாள் மாஸ் வசூல்.. எத்தனை கோடி தெரியுமா?
சென்னை: அஜித் நடித்த துணிவு திரைப்படம் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானது. அதைத்தொடர்ந்து 2 வருடங்கள் கழித்து தற்போது, விடா முயற்சி திரைப்படம் தியேட்டரில் வெளியாகி உள்ளது. இப்படத்தை மகிழ் திருமேணி என்ற தரமான இயக்குனர் கூட்டணியுடன் அஜித் இணைந்துள்ளார். இதில் த்ரிஷா,அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என பலர் நடித்துள்ளனர். படத்தில் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட், அஜித்தின் நடிப்பு என அனைத்தும் படத்திற்கு பிளஸாக அமைந்துவிட்டதால் பாக்ஸ் ஆபிஸிலும் படம் கலக்கி வருகிறது. இப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த நிலவரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்
அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகள் கழித்து எந்தவிதமான ஆர்பாட்டமும் இல்லாத ஒரு கதையில் அஜித் நடித்திருக்கிறார். அஜித் மற்றும் த்ரிஷா திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அந்த நேரத்தில் திரிஷாவின் கர்ப்பம் கலைகிறது. அதன்பின் கணவன் மனைவிக்குள் விரிசல் ஏற்பட்டு இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார்கள். இந்த நேரத்தில் த்ரிஷா, தன் அப்பா வீட்டுக்கு போக முடிவெடுக்கிறார். ஆனால், அஜித் கடைசியாக நான் உன்னுடன் இருக்கப்போகிறேன், நானே உன்னை ட்ராப் செய்கிறேன் என்கிறார்.

விடாமுயற்றி: வந்த இடத்தில் கார் பழுதாகிவிட,அர்ஜுன், ரெஜினா தம்பதிகள் உதவி செய்து, திரிஷாவை மட்டும் ட்ரெக்கில் ஏற்றி செல்கின்றனர். ஆனால், ட்ரக்கில் ஏறிய திரிஷா காணாமல் போக, அஜித் அர்ஜுனை தேடி வந்தால் அர்ஜுனோ நீங்கள் யார் என்றே தெரியாது என்கிறார். அஜித், இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்து எதுவும் நடக்கவில்லை. இந்த நேரத்தில், அஜித்தை ஆரவ் கேங் அடித்து அர்ஜுனிடம் அழைத்து செல்ல அங்கு பெரிய டுவிஸ்ட் ஒன்றை ரெஜினா சொல்ல, அதன் பின் அஜித் திரிஷாவை கண்டுப்பிடித்தாரா, இல்லையா? ரெஜினா சொன்னது உண்மையா என்பது தான் விடாமுயற்சி படத்தின் கதை.
அதிரடியான நடிப்பு: இந்த படத்தில் அஜித் மாஸ் ஹீரோவாக இல்லாமல் ஒரு நார்மல் மனிதனுக்கு ஒரு பிரச்சனை வந்தால், அந்த பிரச்சனையை அவன் எப்படி சமாளிப்பான் என்பதை இயக்குநர் மகிழ் திருமேனி அழகாக வெளிப்படுத்தி உள்ளார். மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு அஜித்-திரிஷா இருவரையும் ஜோடியாக திரையில் பார்ப்பது அத்தனை அழகாக இருந்தது. அதிலும் இளமை தோற்றத்தில் அஜித் சூப்பர் என படம் பார்த்தவர்கள் கூறிவருகின்றனர். அதே போல, வழக்கம்போல அனிருத் இசையில் பின்னி எடுத்துவிட்டார். இந்த படத்தின் வெற்றிக்கு அவரின் இசையும் ஒரு காரணம் என ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
படத்தின் வசூல்: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான விடா முயற்சி படத்தின் முதல் நாள் வசூலை சென்னையில் மட்டும் ரூ. 2.3 கோடியும், உலக அளவில் ரூ. 25.5 கோடி வசூலை அள்ளியதாக கூறப்பட்டது. இதையடுத்து, இரண்டாம் நாள் வசூல்,ரூ8.87 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் விடாமுயற்சி திரைப்படம், 34.7 கோடியை வசூலித்து இருப்பதாக Sacnilk தளம் தெரிவித்துள்ளது. இனி வரும் நாட்கள் விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











