விடாமுயற்சி படப்பிடிப்பு விடாமுயற்சியால் முடிந்தது.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

சென்னை: துணிவு படத்தை முடித்த கையோடு நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தில் கமிட்டானார். இந்த படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கிவருகிறார். இரண்டுவருடத்திற்கும் மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு குறித்த முக்கியதான தகவலை சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.

அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். பல வருடத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படம் வெளியாகிறது.

AjithKumar Vidaamuyarchi

விடாமுயற்சி: இப்படம் திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின்னர், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வந்தது.

பின்பு படப்பிடிப்பு தளத்தில் அஜித், கார் ஓட்டும் போது விபத்துக்குள்ளான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்பு மீண்டும் சில இடைவெளிக்குப் பிறகு, அஜர்பைஜானில் படப்பிடிப்பு தொடங்கியது. இதையடுத்து சண்டைக் காட்சிகளில் அஜித் நடிக்கும் வீடியோ ஒன்று வெளியானது. இதனையடுத்து விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

குஷியில் ரசிகர்கள்: இதைத் தொடர்ந்து படத்தின் மூன்றாவது போஸ்டரை இரண்டு தினத்திற்கு முன் படக்குழு வெளியிட்டது. அந்த போஸ்டரில் அஜித்துடன் த்ரிஷாவும் இடம்பெற்றுள்ளார். மேலும் அஜித் புது தோற்றத்தில் இருந்தார். இதைத் தொடர்ந்து படக்குழு விரைவில் டீசர், ட்ரைலர் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தளபக்கத்தில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது என்று படக்குழுவுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இந்த மகிழ்ச்சியான தகவலால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X