அஜர்பைஜான் சாலையில் ராஜநடை போட்டு வரும் அஜித் குமார்.. அட்டகாசமாக வெளியான விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக்!
சென்னை: லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சியின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அஜர்பைஜான் ரோட்டில் ராஜநடை போட்டு நடந்து நடிகர் அஜித் குமார் நடந்து வரும் தாறுமாறான காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
விடாமுயற்சி படத்தின் டைட்டில் அறிவிப்பு கடந்த ஆண்டு அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு மே 1ம் தேதி வெளியானது. அதன் பின்னர் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. ஆனால், பெரிதாக எந்தவொரு அப்டேட்டும் ரசிகர்களுக்கு வெளியாகவில்லை.

திடீரென அஜர்பைஜானில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு சென்னைக்கு படக்குழுவினர் திரும்பினர். கடந்த 6 மாதங்களாக நிதி நெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு தற்போது மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கியுள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.
ஒருவருஷம் கழித்து: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒரு வருடம் கழித்து வெளியாகி உள்ளது. குட் பேட் அக்லி படத்தின் அறிவிப்புடம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் என அடுத்தடுத்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் பொங்கலுக்கு வரவுள்ள படத்துக்கு இப்போதிருந்தே சரியாக புரமோஷனை செய்து வரும் நிலையில், விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு விடாமுயற்சி பக்கம் அஜித் ரசிகர்களை திருப்ப லைகா நிறுவனம் முடிவு செய்து இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர் என்கின்றனர்.
மங்காத்தா கிளைமேக்ஸ்: மங்காத்தா கிளைமேக்ஸில் அஜித் குமார் மற்றும் அர்ஜுன் இருவரும் பணம் நிறைந்த பேக்கை தூக்கிக் கொண்டு கெத்தாக நடந்து வருவது போல இந்த படத்தில் அஜர்பைஜான் சாலையில் அஜித் குமார் மட்டும் பண பேக்கை தூக்கிக் கொண்டு நடந்து வருவது போல போஸ் கொடுத்துள்ளார்.
தல தீபாவளி: இந்த ஆண்டு தீபாவளிக்கு கண்டிப்பாக அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடப் போகிறது. அஜித்துடன் மோத வேண்டாம் என்பதற்காகத்தான் சூர்யா கங்குவா படத்தை ரஜினிகாந்தின் வேட்டையன் படத்துடன் மோத விட்டுள்ளார் என்றும் கூறுகின்றனர். லைகா தொடர்ந்து இதே போல அப்டேட்டை கொடுத்து ரசிகர்களை ஹேப்பியாக்கினால் போதும் என ரசிகர்கள் லைகாவுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











