இல்லுமினாட்டி ட்யூனை காப்பியடித்தாரா அனிருத்?.. விடாமுயற்சி பாடலை ட்ரோல் செய்யும் விஜய் ஃபேன்ஸ்!
சென்னை: இந்த ஆண்டு மலையாளத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேஷம் படத்தில் இடம்பெற்ற இல்லுமினாட்டி பாடல் டாப் 10 சிறந்த பாடல்களில் ஒன்று என்றும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பாடல் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், நேற்று அஜித் குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலே அந்த பாடலின் ட்யூனை காப்பியடித்து அனிருத் போட்டிருக்கிறார் என விஜய் ரசிகர்கள் ரவுண்டு கட்டி வருகின்றனர்.
ராக்ஸ்டார் அனிருத் பாட்டு போட்டாலே அந்த பாடல்கள் எல்லாம் அடுத்த நொடியே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துவிடும். மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ், ரம்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான "சவதீக்கா' பாடலின் லிரிக் வீடியோ வெளியானதும் வேறலெவலில் ஹிட் அடித்துள்ளது.

அனிருத் மற்றும் அந்தோனி தாசன் வேறலெவலில் வைப் செய்து பாடலை பாடியுள்ள நிலையில், ஸ்லிம் லுக்கில் அஜித் குமார் மற்றும் த்ரிஷா போட்ட ஆட்டத்தை பார்த்து இப்படியொரு அஜித் பாடலை பார்த்து பல வருடங்கள் ஆகிறதே என ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், காப்பி கேட் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.
அனிருத்தும் காப்பி கேட் சர்ச்சையும்: ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் பாடல்கள் எல்லாமே எந்தளவுக்கு ஹிட் அடிக்கிறதோ அந்தளவுக்கு காப்பி சர்ச்சையிலும் சிக்கி வருகிறது. விஜய்யின் லியோ படத்தில் இடம்பெற்ற ஐ எம் ஆர்டினரி பர்சன் பாடல் பிரபல வெப்சீரிஸான பீக்கி பிளைண்டர்ஸில் இடம்பெற்ற 'ஐ எம் நாட் ஆன் அவுட்சைடர்' பாடலில் இருந்து சுடப்பட்டதாக சர்ச்சைகள் வெடித்தன. ஒவ்வொரு பாடலுக்கும் இதே போன்ற சர்ச்சைகள் உருவாகி வரும் நிலையில், தற்போது அஜித் பாடலும் காப்பி என கட்டம் கட்ட ஆரம்பித்துள்ளனர்.
ஆவேசம் பாடல் காப்பி?: ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஆவேஷம் படத்தில் சுஷின் ஷியாம் இசையில் உருவான "இல்லுமினாட்டி" பாடலின் ட்யூனை அப்படியே காப்பியடித்து அனிருத் விடாமுயற்சி ஃபர்ஸ்ட் சிங்கிளான "சவதீக்கா' பாடலை உருவாக்கியுள்ளார் என விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
3 மில்லியன் வியூஸ்: நேற்று மாலை விடாமுயற்சி படத்தின் சவதீக்கா பாடல் வெளியான நிலையில், இதுவரை சுமார் 3 மில்லியன் வியூஸ் வரை அந்த பாடல் அள்ளியிருக்கிறது. அஜித் ரசிகர்கள் தொடர்ந்து அந்த பாடலை பார்த்து டிரெண்டாக்கி வருகின்றனர். பாடலில் உள்ள வரிகள் எல்லாம் பெண்களையும் குறிப்பாக மனைவிமார்களையும் கவரும் விதத்தில் உள்ள நிலையில், டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











