ஒரே ஒரு சீன்.. முழு கதையும் லீக் ஆகிடுச்சு?.. அந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா அஜித்தின் விடாமுயற்சி?

சென்னை: லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஆரவ் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித் குமார் கார் ஓட்டிக் கொண்டு சென்று விபத்தில் சிக்குவது போன்ற காட்சியை அஜர்பைஜானில் கடந்த நவம்பர் மாதம் படமாக்கி விட்டு பின்னர் சென்னைக்கு படக்குழு திரும்பினர்.

அதன் பின்னர் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் 10ம் தேதி மீண்டும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Ajith Kumar s Vidamuyarchi might be Breakdown hollywood movie remake

அதனை முன்னிட்டு தற்போது விடாமுயற்சி படத்துக்காக நடிகர் அஜித் எந்தளவுக்கு ரிஸ்க் எடுத்துள்ளார் பாருங்க என அஜித் குமார் மற்றும் ஆரவ் தங்கள் உயிரையே பணயம் வைத்து நடித்த காட்சியை சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் இது அந்த ஹாலிவுட் படத்தின் காப்பி என கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

விடாமுயற்சி கார் சீன்: விடாமுயற்சி படத்தில் அஜித் குமார் என்ன லுக்கில் இருக்கிறார் என்றே புரியாமல் தவித்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அப்டேட் கூட வராமல் இருந்தது. இந்நிலையில், எந்தவொரு முன் அறிவிப்புமின்றி திடீரென ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கும் விதமாக விடாமுயற்சி படத்தின் ரிஸ்க்கான கார் சீன் காட்சியையே வெளியிட்டுள்ளனர்.

Ajith Kumar s Vidamuyarchi might be Breakdown hollywood movie remake

ரிஸ்க் எடுக்க வேண்டாம் அஜித்: வேட்டி சட்டையில் விஸ்வாசம் படத்தில் சும்மா மீசையை முறுக்கி விட்டு நடித்தாலே படம் பிளாக்பஸ்டர் ஆகிவிடும் அளவுக்கு மாஸ் உள்ள நிலையில், ரசிகர்களுக்காக இப்படி மெனக்கெட்டு ரிஸ்க் எடுக்க வேண்டாம் தல என்றே ரசிகர்கள் அந்த வீடியோவை பார்த்து பதறிப் போயுள்ளனர்.லியோ படத்தின் கார் ஸ்டன்ட் காட்சி சிஜியிலேயே எடுக்கப்பட்ட நிலையில், இத்தனை ரிஸ்க் எடுத்து வெட்ட வெளியில் ஷூட் செய்ய வேண்டுமா? என கேள்விகள் கிளம்பி உள்ளன.

ஹாலிவுட் பட காப்பியா?: வலிமை படத்தின் கிளைமேக்ஸ் காட்சியே ஜாக்கி சான் நடிப்பில் வெளியான போலீஸ் ஸ்டோரி படத்தில் இருந்து தான் சுட்டு வைத்திருப்பார் எச். வினோத். இந்நிலையில், விடாமுயற்சி படத்தில் இருந்து வெளியான இந்த ஒரே ஒரு சீனை பார்த்த ரசிகர்கள் 1997ம் ஆண்டு கர்ட் ரசல் நடிப்பில் வெளியான Breakdown படத்தின் காப்பியா? என்கிற கேள்வியை எழுப்பி உள்ளனர்.

என்ன கதை: கார் பிரேக் டவுன் ஆன நேரத்தில் காணாமல் போகும் தனது மனைவியை விடாமுயற்சியுடன் ஹீரோ கர்ட் ரசல் தேடி கண்டுபிடிப்பது தான் பிரேக்டவுன் படத்தின் கதை. ஆரவ் இந்த படத்தில் அஜித்துக்கு எதிராக நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பார் என்றும் முதலில் அஜித்தை கட்டி வைத்து அவர் சித்ரவதை செய்ய, அதன் பின்னர் அஜித் ஆரவ்வை அடித்து கட்டிப் போட்டு விட்டு தனது மனைவி எங்கே எனக் கேட்டுக் கொண்டிருக்கும் போது தான் இந்த கார் விபத்து நடைபெறும் என ரசிகர்கள் அந்த படத்தின் காட்சிகளை வைத்து விடாமுயற்சி படத்தின் கதையே இதுதான் எனக் கூறிவிட்டனர்.

லியோவை போல: லோகேஷ் கனகராஜை வைத்து விஜய் நடித்த லியோ படம் ஹாலிவுட் படமான ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ் படத்தின் தழுவல் தான் என அதிகாரப்பூர்வமாக அறிவ்க்கப்பட்ட நிலையில், இந்த படமும் பிரேக்டவுன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இருக்குமோ என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X