கடவுளே அஜித்தேன்னு கத்துனாங்க.. விடாமுயற்சி டீசர் வியூஸ் சாதனையே படைக்கலையேப்பா.. ரொம்ப டல்!
சென்னை: டொனால்ட் டிரம்ப் வரை சென்று விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை அஜித் ரசிகர்கள் கேட்டு அலப்பறை எல்லாம் செய்தாலும், டீசர் வெளியான பின்னர் எந்தவொரு ஆரவாரமும் அஜித் ரசிகர்கள் மத்தியில் இல்லாமல் அப்படியே அமைதியாக என்ன காரணம் என்று தான் தெரியவில்லை என கோலிவுட்டே குழம்பிப் போய் நிற்கிறது.
லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் பிக் பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் டீசர் கட் ஹாலிவுட் தரத்தில் இருந்தாலும், ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கும் விதமாகவோ ரசிகர்கள் உற்சாகமடையும் விதமாகவோ இல்லை என்கிற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன.

ஹாலிவுட் படமான பிரேக்டவுன் படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல் தான் இந்த படம் என்று டீசரை பார்த்த பின்னர் மீண்டும் ரசிகர்கள் உறுதி செய்த நிலையில், பல வருட பழைய படத்தை தற்போது மகிழ் திருமேனி அஜித்துக்காக உருவாக்கியிருக்கிறாரே இது எந்தளவுக்கு கை கொடுக்கும் என்பது கேள்வியாக எழுந்துள்ளது.
த்ரிஷாவை காப்பாத்த போராடும் அஜித்: லியோ படத்தில் மனைவி த்ரிஷா மற்றும் தனது குடும்பத்தை காப்பாற்ற விஜய் போராடிய நிலையில், விடாமுயற்சி படத்தில் அஜித் த்ரிஷாவை காப்பாற்ற போராடுவது தான் கதை என்பது ரிவீல் ஆகியிருக்கிறது. ஸ்க்ரீன்பிளே பிரேக்டவுன் படத்தில் பரபரப்பாக இருந்ததால் தான் அந்த படம் ஹிட் அடித்தது. அதே அளவுக்கு தமிழ் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடுவார்களா என்றும் ஹாலிவுட் படத்தை பார்த்துவிட்ட ரசிகர்கள் பெரிதாக விருப்பம் தெரிவிக்க வாய்ப்பில்லை என்றும் கூறுகின்றனர்.
துல்கர் சல்மான் - சாய் பல்லவி படம்: மலையாளத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான கலி படத்தின் கதையும் கிட்டத்தட்ட பிரேக்டவுன் படத்தின் கதை தான். ஆனால், அழகாக காப்பி அடித்து வேறு ஒரு ஃப்ளேவரில் அந்த படத்தை உருவாக்கியிருப்பார்கள். துல்கர் சல்மான் மற்றும் சாய் பல்லவி காரில் செல்லும் போது லாரி டிரைவர் ஒருவர் பிரச்சனை செய்வதும் ஒரு மோட்டலில் நடைபெறும் சம்பவங்கள் என அந்த படம் இதே கதையம்சத்துடன் உருவாகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
10 மில்லியன் கூட வரல: விஜய்யின் கோட் படத்தின் டிரெய்லர் 24 மணி நேரத்தில் 39 மில்லியன் வியூஸ் கடந்த நிலையில், அஜித்தின் விடாமுயற்சி படத்தின் டீசர் 2 நாட்கள் ஆகும் நிலையில், இன்னமும் 10 மில்லியன் வியூஸ் கூட வரவில்லை என்றும் வெறும் 8 மில்லியன் வியூஸ் தான் இதுவரை வந்திருப்பது அஜித் ரசிகர்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடவுளே அஜித்தே: சபரி மலைக்கு மாலை போட்டுக் கொண்டு போகும் போது கூட சாமியே ஐயப்பா என்று சொல்லாமல் கடவுளே அஜித்தே என ரசிகர்கள் விடாமுயற்சி பேனரை எல்லாம் எடுத்துக் கொண்டு சென்று அங்கே காண்பித்து போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்து வெளியிட்டு வருகின்றனர். ஆனால், விடாமுயற்சி அப்டேட் வந்த பின்னர் அஜித் ரசிகர்கள் பெரிதும் ஆர்வம் காட்டாமல் டீசரை மிகப்பெரிய சாதனை டீசராக மாற்றாமல் போக முக்கிய காரணமே நள்ளிரவு 11:08க்கு லைகா நிறுவனம் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி வெளியிட்டது தான் என்கின்றனர். பொங்கலுக்கு வெளியாகும் விடாமுயற்சி திரைப்படம் அமரன் படத்தின் வசூலை முறியடிக்குமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











