காதலர் தினத்துக்கும் காத்து வாங்கும் விடாமுயற்சி.. பச்சை நிறமே பச்சை நிறமே.. புக் மை ஷோ நிலவரம்!

சென்னை: கடந்த வியாழக்கிழமை வெளியான அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் இந்த வெள்ளிக்கிழமை தமிழ் சினிமாவில் 7க்கும் மேற்பட்ட புதிய படங்களின் வருகையால் பல தியேட்டர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும், விடாமுயற்சி திரைப்படத்தை விடாமுயற்சியுடன் 2வது வாரமும் ஓட்டிவிடலாம் என ஓட்டிக் கொண்டிருக்கும் தியேட்டர்களின் நிலைமை ரொம்பவே கவலைக்கிடமாக உள்ளதாக கூறுகின்றனர்.

விடாமுயற்சி திரைப்படத்தின் பாசிட்டிவ் விமர்சனங்களை வெளியிட்டு லைகா நிறுவனம் செய்து வந்த புரமோஷனும் எந்தவொரு பலனையும் கொடுக்காத நிலையில், தமிழ்நாட்டில் அந்த படத்தின் வசூல் வேட்டை ரொம்பவே மோசமான நிலையில் உள்ளதாக கூறுகின்றனர்.

Vidamuyarchi Valentine s Day 2025 Ajith Kumar 2025

வெள்ளிக்கிழமை, காதலர் தினம் என இருந்தும் இன்றும் புக் மை ஷோவில் பல தியேட்டர்களில் விடாமுயற்சி படத்துக்கு டிக்கெட் புக்கிங்கே ஆகாமல் பச்சை நிறத்தில் காட்சியளிக்கப்பட்டு வருவது அஜித் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

அப்டேட் அலப்பறை மட்டுமே: ஆன்லைனில் அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்டு அலப்பறை செய்து வருவது வாடிக்கையாக மாறிவிட்டது. ஆனால், தியேட்டரில் படம் வெளியானால், அந்த படத்தை முதல் நாளே 100 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டை படமாக மாற்றும் அளவுக்கு ஆஃப் லைனில் அஜித் ரசிகர்கள் இல்லையா? அல்லது குறைந்துவிட்டார்களா என்கிற சந்தேகத்தையே விடாமுயற்சி படத்தின் வசூல் கணக்குகள் கிளப்பி வருகின்றன.

காதலர் தினத்துக்கும் காத்து வாங்குது: காலியான தியேட்டர்களில் காதலர்கள் கூடுவார்கள் என்று கிண்டலடிப்பார்கள். காதலர் தினத்துக்கு கூட விடாமுயற்சி படம் வெளியான தியேட்டர்கள் காத்து வாங்குதே என புக் மை ஷோ படத்தின் புக்கிங் ஸ்டேட்டஸை போட்டு அஜித்தின் ஹேட்டர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் காதலர் தினத்துக்கு ஏற்ற படம் விடாமுயற்சி, கண்டிப்பா போய் பாருங்க என புரமோட் செய்து வரும் நிலையில், அவரது ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

பச்சை நிறமே பச்சை நிறமே: சில பிவிஆர் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டும் ஆரஞ்சு நிறத்தில் டிக்கெட் புக்கிங் காணப்படுகிறது. மற்றபடி பல தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் பச்சை நிறத்தில் தான் காட்சியளிக்கின்றன. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளின் நிலைமையும் அப்படியே இருப்பது அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

விடாமுயற்சி வசூல் இதுவரை எவ்வளவு?: லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் இதுவரை இந்தியளவில் 84 கோடி ரூபாய் வசூலும் உலகளவில் 120.25 கோடி ரூபாய் வசூலும் அள்ளியிருப்பதாக கூறுகின்றனர். அதிக பொருட்செலவில் 2 ஆண்டுகள் உருவான படத்தின் வசூல் இவ்வளவு தானா என திரையுலகமே அதிர்ச்சியடைந்துள்ளது. மேலும், பெரிய பட்ஜெட்டில் இனிமேல் படம் எடுப்பதற்கு தயாரிப்பு நிறுவனங்கள் ரொம்பவே தயக்கம் காட்டும் என்றும் கூறி வருகின்றனர். விஷால் பேச்சை எல்லாம் கேட்காமல், வெறும் 4 கோடி ரூபாயில் நல்ல படத்தை எடுத்து 20 கோடி ரூபாய் சம்பாதித்தாலே போதும் என பலரும் குடும்பஸ்தன், லப்பர் பந்து, வாழை போன்ற படங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X