ரத்தம் ஒரு சொட்டு மிச்சமிருந்தாலும்.. விடாமுயற்சி டிரெய்லர் BTS வீடியோ சும்மா தெறிக்குதே!

சென்னை: விடாமுயற்சி படத்தின் புரமோஷனை லைகா நிறுவனம் அதிரடியாக ஆரம்பித்துள்ளது. மலேசியாவில் விடாமுயற்சி ஸ்டிக்கர் ஒட்டிய கார்களின் அணிவகுப்பு வீடியோ வெளியாகி அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், அடுத்ததாக விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் BTS வீடியோவை வெளியிட்டு ஒரு படத்துக்கு பின்னால் இருக்கும் உழைப்பை வெளிக்காட்டியுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்த லியோ படம் 6 மாதங்கள் காஷ்மீரில் படமாக்கப்பட்டு வந்த உடனே அதன் BTS எனப்படும் Behind The Scene காட்சிகளை வெளியிட்டு சென்னையில் இருந்து காஷ்மீருக்கு சென்ற டீமையும் அவர்களது கடின உழைப்பையும் காட்டிய வீடியோ வெளியானது.

vidamuyarchi ajith kumar trisha

அது படத்தின் ரிலீஸ் சமயத்தில் பக்க பலமாக இருந்து 600 கோடி வரை அந்த படம் வசூல் செய்ய உதவியாக இருந்த நிலையில், தற்போது விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் காட்சியின் மேக்கிங் காட்சிகளை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

பிப்ரவரி 6 பெரிய பண்டிகை: இந்த மாதம் ஜனவரி 10ம் தேதி விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருந்தால் 10 நாள் விடுமுறை கலெக்‌ஷனையும் ஒட்டுமொத்தமாக அந்த படம் அள்ளியிருக்கும். ஆனால், கடைசி நேரத்தில் ஏற்பட்ட பஞ்சாயத்தை லைகா நிறுவனம் உடனடியாக சரிசெய்ய முடியாமல் போன நிலையில், பிப்ரவரி 6ம் தேதி படம் வெளியாகிறது. எப்படி இருந்தாலும், அன்றைய தினம் தான் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு பொங்கல் பண்டிகையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வியாழக்கிழமை வெளியாகும் படம் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து 4 நாட்கள் ஓடினாலே மிகப்பெரிய வசூலை அள்ளிவிடும் என எதிர்பார்க்கின்றனர்.

பஞ்ச் டயலாக், மாஸ் சீன் எல்லாம் இல்லை: இயக்குநர் மகிழ் திருமேனி உஷாராக அஜித் குமார் சொன்ன கதையைத்தான் இயக்கியுள்ளேன் என்றும் இந்த படத்தில் அவருக்கு பஞ்ச் டயலாக், மாஸ் சீனெல்லாம் இருக்காது. ஆனால், படம் ஹாலிவுட் படம் போல தரமான மேக்கிங்குடன் ஒவ்வொரு காட்சியை ரசிகர்கள் சீட்டின் எட்ஜுக்கே உட்கார்ந்து ரசித்துக் கொண்டாடுவது உறுதி எனக் கூறியுள்ளார்.

டிரெய்லர் பிடிஎஸ்: சினிமாவில் ஒவ்வொரு காட்சியை உருவாக்குவதற்கு பின்னால் ஒரு பெருங்கூட்டத்தின் உழைப்பே உள்ளது. அஜர்பைஜானில் 121 நாட்கள் படமாக்கப்பட்டுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் டிரெய்லர் காட்சிகள் எப்படி படமாக்கப்பட்டது என்கிற BTS காட்சியை தற்போது வெளியிட்டு ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கியுள்ளனர்.

மகிழ் திருமேனி தோளில் தட்டும் அஜித்: இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தை பார்த்து தொடர்ந்து அஜித் அவருக்கு ஆதரவாகவும் பாராட்டுக்களையும் ஊக்கத்தையும் நெகட்டிவிட்டியை எப்படி கையாள்வது என்பதையும் சொல்லிக் கொண்டே வந்த நிலையில், டிரெய்லர் முடிவில் மகிழ் திருமேனி தோளில் அஜித் குமார் கைவைத்து தட்டிக் கொடுக்கும் காட்சிகள் எல்லாம் வேறலெவல் என ரசிகர்கள் படத்தை பார்க்க வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

லைகாவுக்கு கம்பேக்: கடந்த ஆண்டு லைகா தயாரிப்பில் வெளியான மிஷன் சாப்டர் 1, லால் சலாம், இந்தியன் 2 மற்றும் வேட்டையன் உள்ளிட்ட படங்கள் வசூல் வேட்டை நடத்தாத நிலையில், லைகா நிறுவனம் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. அஜித் குமாரின் விடாமுயற்சி படம் வெற்றி பெற்றால் தான் லைகா கம்பேக் கொடுக்கும் என்றும் இந்தியன் 3 உள்ளிட்ட படங்கள் வெளியாக வழி வகுக்கும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X