Vidamuyarchi: விடாமுயற்சி வீக்கெண்ட் டிக்கெட் புக்கிங் எப்படி இருக்கு.. பச்சை நிறமா? ரெட் அலர்ட்டா?

சென்னை: அஜித் குமார் நடிப்பில் பிப்ரவரி 6ம் தேதி வெளியான விடாமுயற்சி திரைப்படம் முதல் நாளில் நல்ல ஓபனிங்கை பெற்றுள்ள நிலையில், 2வது நாளான வெள்ளிக்கிழமையான இன்று ஈவ்னிங் ஷோ கூட பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாகாமல் உள்ளது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

லைகா நிறுவனம் பிரச்சனைகளை முன்கூட்டியே சரி செய்து சரியாக பொங்கல் விடுமுறையை டார்கெட் செய்து வந்திருந்தால், படம் 10 நாட்களும் வசூல் வேட்டை நடத்தி குறைந்தது 200 முதல் 300 கோடி வசூலை கலவையான விமர்சனங்களுடன் அள்ளியிருக்கும் என்கின்றனர்.

vidamuyarchi vidamuyarchi box office ajith kumar

ஆனால், பண்டிகை நாட்களை விஷாலின் மத கஜ ராஜா வசம் விட்டுவிட்ட நிலையில், விடாமுயற்சி படத்துக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கான டிக்கெட் புக்கிங் எப்படி இருக்கு என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு வருமா?: லைகா தயாரிப்பில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஆரவ் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 40 கோடி ரூபாய் வரை வசூல் அள்ளியிருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 25 கோடி ரூபாய் வரை படம் வசூல் ஈட்டியிருக்கும் என்கின்றனர். ஆனால், இதுவரை லைகா நிறுவனம் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. வெளியிடுவார்களா? என்பது சந்தேகம் தான் என்றும் கூறுகின்றனர்.

வெள்ளிக்கிழமை காத்து வாங்குது: வியாழனன்று விடுமுறை இல்லாத நிலையில், அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் வெளியான நிலையில், முதல் நாள் தல தரிசனத்தை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்து சென்றனர். ஆனால், அதன் பின்னர் சோஷியல் மீடியாவில் கிளம்பிய நெகட்டிவ் விமர்சனம் மற்றும் பல விமர்சகர்களின் கலவையான விமர்சனங்கள் காரணமாக டிக்கெட் புக்கிங் 2வது நாளில் அதிரடியாக குறைந்துள்ளது. புக் மை ஷோவில் இன்று மாலை மற்றும் இரவுக் காட்சிகளுக்கே பல திரையரங்குகள் பச்சை வண்ணத்தில் காட்சியளிக்கின்றன. பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் முதல் வாரம் வரை டிக்கெட் பற்றாக்குறையுடன் ஹவுஸ்ஃபுல்லாக ஓடுவது வழக்கம்.

vidamuyarchi vidamuyarchi box office ajith kumar

சனி, ஞாயிறு நிலமையும் மோசம்: வீக்கெண்டில் விடாமுயற்சி விட்டதை பிடித்துவிடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை டிக்கெட் புக்கிங்கும் இதுவரை டல் அடித்து தான் காணப்படுகின்றன. தியேட்டருக்கே நேரடியாக சென்று டிக்கெட் வாங்கிக் கொண்டு படம் பார்க்கும் நிலைமை தான் உள்ளது என்றும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள், ஏஜிஎஸ் சினிமாஸ் உள்ளிட்ட தியேட்டர்களில் ஓரளவு ஸ்க்ரீன்கள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக உள்ளன.

vidamuyarchi vidamuyarchi box office ajith kumar

காட்சிகள் குறைப்பு: மாயாஜால் தியேட்டரில் முதல் நாள் அஜித்தின் விடாமுயற்சி படத்தை 80 ஷோக்கள் போட்டார்கள். ஆனால், முதல் நாளே பல காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை. இந்நிலையில், அதிரடியாக வெள்ளிக்கிழமையான இன்று 38 ஷோக்களாக குறைத்துவிட்டனர். அதிலும், பல காட்சிகள் பச்சை நிறத்தில் தான் காட்சியளிக்கின்றன.

முதல் வார வசூல் எப்படி இருக்கும்?: தமிழ்நாட்டை தவிர்த்து விடாமுயற்சி திரைப்படம் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் வசூல் ரீதியாக அடிவாங்கியுள்ளது. ஓவர்சீஸில் சில இடங்களில் படம் கல்லா கட்டி வருகிறது. முதல் வார முடிவில் விடாமுயற்சி திரைப்படம் ஒட்டுமொத்தமாக 100 கோடி வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. லைஃப் டைம் வசூலாக 150 கோடி ரூபாய் கூட வருமா என்பது சந்தேகம் தான் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X