விடாமுயற்சி பொங்கல் தானாம்.. அந்த தேதியை லாக் செய்த குட் பேட் அக்லி?.. டீசர் எப்போ தெரியுமா?
சென்னை: லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தான் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வரப்போவது உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படம் தான் பொங்கல் ரிலீஸ் என அறிவித்து வரும் நிலையில், விடாமுயற்சி படத்துக்காக குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், தீபாவளிக்கு விடாமுயற்சி டீசர் வர வாய்ப்பில்லை என்றும் ஆனால், அடுத்த மாதம் இந்த தேதியில் டீசர் வந்துவிடும் என்கிற அப்டேட்களும் கிடைத்துள்ளன.
விடாமுயற்சி டீசர் எப்போ?: அருண் விஜய்யை வைத்து தடையற தாக்க, தடம் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி ஆர்யாவை வைத்து மீகாமன் படத்தை இயக்கினார். உதயநிதி ஸ்டாலினின் கலகத் தலைவன் படத்தையும் இயக்கினார். அடுத்து அஜித்தின் விடாமுயற்சி படத்தை அஜர்பைஜானிலேயே எடுத்து முடித்திருக்கிறார். அஜித் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலிலும் டை அடித்து யங்காக இருக்கும் வின்டேஜ் லுக்கிலும் இந்த படத்தில் நடித்துள்ளார். அதெல்லாம் எப்படி இருக்கு என பார்க்க ஒரு வருஷத்துக்கும் மேலாக விடாமுயற்சி டீசருக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், வரும் நவம்பர் 10ம் தேதி டீசர் வெளியாகும் என தகவல்கள் பரவி வருகின்றன.
பொங்கல் ரிலீஸ்: இந்த ஆண்டு பொங்கல் மற்றும் தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் உள்ளிட்ட இளம் நடிகர்களின் படங்கள் தான் வெளியாகி அந்த பண்டிகைக்கு உண்டான கெத்தையே குறைத்து விட்டதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி படத்தின் டப்பிங் சூடு பிடித்து வரும் நிலையில், சீக்கிரமே டீசர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகும் என தெரிகிறது.
அஜித் பிறந்தநாளுக்கு செம ட்ரீட்: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த ஆண்டு மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விடாமுயற்சி டீசருடன் பொங்கல் ரிலீஸ் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











