அஜித் ரசிகர்களை அப்செட் ஆக்கிய அமரன்.. இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் பொங்கல், எஸ்கே தீபாவளி தான்!
சென்னை: லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படம் இந்த ஆண்டு தீபாவளிக்காவது வந்து விடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அமரன் படம் தீபாவளி ரிலீஸ் என்கிற அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரொம்பவே அப்செட் ஆகியுள்ளனர்.
கடந்த ஆண்டு அஜித் குமாரின் பிறந்தநாளுக்கு விடாமுயற்சி படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியானது. அதற்கு முன்பாக பல மாதங்களுக்கு முன்னதாகவே ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால், கடைசியில் இயக்குநரை மாற்றி விட்டனர்.

மகிழ் திருமேனி கடந்த 2 ஆண்டுகளாக விடாமுயற்சி படத்தை முடிக்க போராடி வருகிறார். கடைசி நேரத்தில் அவருக்கும் நெருக்கடி கொடுத்தால் இந்தியன் 2 மாதிரி படத்தின் ரிசல்ட் அமைந்து விட்டால் என்ன செய்வது என்கிற பிரச்சனை காரணமாக தற்போது அவர் கேட்ட நேரத்தை படக்குழு கொடுக்க முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர்.
அயலான் பொங்கல்: இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படமும் இந்தியன் 2வை போலவே பல ஆண்டுகளாக உருவாகி வந்த நிலையில், அந்த படம் ஏலியன் கதையுடன் வெளியானாலும் ரசிகர்களை கவரவில்லை. 5 ஆண்டுகளுக்கு மேல் படங்கள் உருவானால் அதன் ரிசல்ட் ரொம்பவே மோசமாக இருக்கும் என்பதற்கு இந்தியன் 2வுக்கு முன்னோடியே அயலான் தான். ஆனாலும், பொங்கல் பண்டிகையை டார்கெட் செய்து தனது படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன் அடுத்த பெரிய பண்டிகையையும் குறி வைத்து விட்டார்.
அமரன் தீபாவளி: தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி ஹீரோக்களும் தீபாவளி மற்றும் பொங்கலுக்கு தங்கள் படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்துவார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ரஜினிகாந்த் மற்றும் விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் தீபாவளி ரிலீஸுக்கு பதில் ஆயுத பூஜை, விநாயகர் சதுர்த்தியை டார்கெட் செய்து வருகின்றனர். பிரின்ஸ் படம் தீபாவளிக்கு வெளியான நிலையில், அதே போல தற்போது அமரன் படத்தை சிவகார்த்திகேயன் தீபாவளி ரிலீஸாக அக்டோபர் 31ம் தேதி வெளியிடுகிறார்.
விடாமுயற்சி லேட்டாகும்?: அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு சம்மருக்கே வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தீபாவளிக்கு கூட வராது என்கின்றனர். அதிகபட்சம் கிறிஸ்துமஸ்க்கு படம் வெளியாகுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. பொங்கலுக்கு குட் பேட் அக்லி வரும் என அறிவித்துள்ளனர். அந்த படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்பதும் சந்தேகம் தான் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











